Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இன்னும் இருக்கிறது ஜாதிய வன்மம்

இன்றைய நவீன காலகட்டத்தில் இதெல்லாம் யார் பாக்குறாங்க என்று நாம் எளிதாகக் கடந்து விடும் ஜாதி ஏற்றத்தாழ்வு கண்ணோட்டம் என்பது இன்னும் மாறவில்லை என்பதை ஆணியில் அடித்தாற் போல நிரூபித்திருக்கிறது இன்றைய நடப்பு. சமீபத்திய நீயா நானா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கிராமத்தில் பிறந்து நகரத்து மாப்பிள்ளையைத் தேடும் பெண்கள், அவர்களுக்கு எதிராக கிராமத்து மாப்பிள்ளையின் தாயார் என்ற தலைப்பில் வாங்குவாதம் நிகழ்ந்தது. அதில் ஒரு தாயார், எதிரணியில் அமர்ந்திருந்த ஒரு இளைய பெண்ணைக் குறிப்பிட்டு, […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 4

பாகம் 01, பாகம் 02, பாகம் 03 மல்லிகா மீண்டும் பழைய வாழ்வின் நினைவுகளை அசை போடத்துவங்குகிறாள். அடிபட்ட மகன் மல்லிகாவின் மடியை ஆக்கிரமித்துக்கொள்ள, மூத்தவன் மல்லிகாவின் தோளில் சாய்ந்து கொண்டான். விவரம் தெரிந்த பின் மூத்த பிள்ளை தாயின் அரவணைப்பை தேடும் முதல் தருணம் இதுதான்.மல்லிகாவுக்கும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.“அம்மா, தம்பிக்கு என்னால தாம்மா இப்படி ஆச்சு”, என்று வெடித்து அழத்துவங்குகிறான். “விடுடா, நான்தான் எப்படி ஆச்சுணே கேட்கலியே டா?எப்படியும் விளையாடும் போது பட்ட அடிதானே? தெரியாம […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

பாகம் 01, பாகம் 02 மல்லிகாவோ மனதில் திகிலுடனும், பக்தியுடனும் கடவுளாக மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு என்ன ஆச்சுங்கய்யா என்று கேட்க,மருத்துவர், “பயப்படும்படியா ஒன்னுமில்ல மா!கண்ணுக்கு மேல பட்ட அடி கண்ணுல பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும். அடி பலமா பட்டதால நிறைய இரத்தம் போயிருக்கு, அத பாத்ததும் பையன் மயங்கிட்டான்.” “நான் வலிக்கு ஊசி போட்டு, அந்த இடத்துல தையல் போட்டுருக்கேன், அங்க நர்ஸ்ட்ட மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க, எப்படி சாப்பிடனும்னு கேட்டுக்கோங்க!” “இப்ப பால் […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

விடுதலை- திரை விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது. பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது? ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி […]

Categories
சினிமா தமிழ்

சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்

ஒரு கல்லை எடுத்து அதை சிலையாக வடித்து சில மந்திரங்களை சொன்ன பிறகு அது கடவுளாகி விட்டது என்று நம்பும் பல மனிதர்கள் ஏனோ எத்தனை ஆண்டுகளானாலும் கீழ்சாதிக்காரன் தீட்டுக்காரன், தீண்டத்தகாதவன், அவன் நமக்குக் கீழே தான் என்ற எண்ணத்தை மட்டும் மாற்றுவதே இல்லை. ஒரு கல்லை கடவுளாக்கத் தெரிந்த அந்த மனிதர்களுக்கு சக மனிதனை மனிதனாகக் கூட மதிக்கத் தெரிவதில்லை என்ற வருத்தமான சமூகநீதிக் கருத்தை எடுத்துச் சொல்லும் சினிமா தான் நந்தன். நமக்குத் தெரிந்த, […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா?

இறைச்சி. விடுமுறை நாட்கள் மற்றும் விருந்து என்றாலே பல மனிதர்களின் முதல் தேர்வு இறைச்சி தான். இவற்றின் பல வகைகளையும், இவற்றை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். சிக்கன் மற்றும் மீன் இறைச்சி வகைகள் என்றால் பெரும்பாலான இறைச்சி பிரியர்களும் சமரசமாக ஏற்றுக் கொள்வார்கள். மட்டன் இறைச்சியை ஒரு சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சிகப்பு இறைச்சி உடலில் இரத்தக் கொதிப்பு அதிகமாகக் காரணமாகக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது அவர்களால். மட்டன் எனப்படும் ஆட்டிறைச்சியில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அதிகாரத்தின் சறுக்கல் – சாதியின் வெளிப்பாடு

மெட்ராஸ்ல லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..? நவநாகரீக சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறிய எனக்கு எதிர்வீட்டில் வசிப்பவர், ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அலுவலகத்தில் பணி நேரத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் அந்த குடியிருப்பிலும். தண்ணீர் மின்விசைப்பம்புகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது. சுவிட்ச் எல்லோருக்கும் பொதுவாக வெளியே இருந்தாலும் கூட, தண்ணீர் தேவை என்றால் அவரிடம் சொல்லியே சுவிட்ச் போட வேண்டும்.அந்த குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் கூட ஒரு ஒழுக்கமான பராமரிப்பு […]

Categories
குட்டி கதை தமிழ்

பரிமாறும் கைகள்

தமிழ்நாட்டின் இன்னும் கூட சாதி பார்க்கும் ஏதோ ஒரு ஊரின் சத்துணவு ஆயா அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவர் அந்தப்பணியை செய்ய விடாமல் ஒரு கூட்டம் தடுக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியக்கூடாத 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அந்த ஆயா கீழ்சாதி என்று அவர் சமைத்த உணவை குப்பையிலிடுகின்றனர். கலெக்டர் தலையிட்டு அந்த ஆயாதான் இனி சமைப்பார் என உறுதி ஆன பின்னர், சாதி வெறி […]