Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

அளவைக் கடந்த தற்குறித்தனம்!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. இதை நாம் அன்றாடம் உபயோகித்திருந்தாலும் பெரும்பாலும் உணவின் அளவைக் குறிப்பிடவே உபயோகித்திருப்போம் அல்லது உண்மையிலேயே அது உணவின் அளவைக் குறிப்பதற்கு மட்டும் என்றே நினைத்திருப்போம். அது தவறு.உண்மையிலேயே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவுப் பழக்கத்தில் மட்டுமல்ல. அன்றாடம் நாம் செய்யும் அனைத்திலும் தான். இன்று ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது.தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் இட்லி கடை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.அந்த […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தகர்க்கப்பட்ட எதிர்பார்ப்புகளும் , நினைவுகளும்!

அங்கே இடிக்கப்பட்டது கட்டிடமல்ல, பலரது நினைவகளின் கோட்டை. தரைமட்டமாக்கப்பட்டது தளமல்ல. பலரின் எதிர்பார்ப்புகள். நொறுக்கப்பட்டது செங்கற்கள் மட்டுமல்ல.பலரது இதயங்கள். என்னாங்க இது இவ்வளவு பில்டப்பு என்று யோசிக்கிறீர்களா? சென்னை வடபழனியில் இரண்டு பேமஸ் என்று வடிவேலு சொல்லுவார்.ஆனால் வடபழனி என்றால் இதையும் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது. ஏழைகளின் தோழி, சினிமா ரசிகர்களின் அன்புத்தாய், நடுத்தர மக்களை அன்போடு அரவணைக்கும் தங்கத் தாரகை, ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம். பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று கட்டிடமே இடித்துத் […]

Categories
கருத்து சினிமா தகவல் நினைவுகள்

மலை மனிதனின் கதை

மனமிருந்தால் மலையையும் புரட்டிப் போடலாம் என்ற கடந்து வராதோர் இல்லை. அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்த மனிதர்.மலையைப் புரட்டவில்லை.நொறுக்கியே விட்டார். தெய்வாத்தா லாகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். திருக்குறளில் பொருட்பாலில் அரசியல் இயலில் 62 ஆவது அதிகாரமான ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளினை நாம் பலமுறை வாசித்திருப்போம். இந்தக்குறளை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் தான் இந்த மலை மனிதர் தசரத் மான்ஜி. யார் இவர்? எதற்காக மலையை உடைத்தார் என்பதைக் காணலாம். […]

Categories
சினிமா

சக்தித் திருமகன்- விமர்சனம்.

சக்தித் திருமகன் என்ன சொல்கிறார் பார்க்கலாம். சமீபத்தில் வெளியான விஜய் ஆன்டணி அவர்களின் 25 ஆவது படமான சக்தித் திருமகன் பெருவாரியான ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய படம் தான். என்ன பழசு?என்ன புதுசு? பழசு என்றால், அதே ஊழல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பித்தலாட்டம், ஏமாற்றப்படும் சுரண்டப்படும் வஞ்சிக்கப்படும் பொதுமக்கள் , இவர்களைக் காப்பது கதாநாயகனின் கடமை.அவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாவும் நிலையே வந்தாலும் பொதுமகக்ளைக் காப்பாற்றுவதே தனது தலையாய […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

இசை அரசன் 👑-50

ராஜாவுக்கு இன்னொரு மணிமகுடம்- இளையராஜா 50. இசையால் வசமாகா இதயம் உண்டோ, இறைவனே இசை வடிவம் எனும்போது, தமிழ் இசையால் வசமாகா இதயம் உண்டோ என்ற பாடல் வரிகள் உண்டு. இந்தப் பாடல் வரிகளை ஊர்ஜிதப்படுத்தியது இசைஞானி, இசை அரசன், பெயரிலேயே ராஜாவைக் கொண்ட இளையராஜா என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமா உலகின் சிறந்த பாடல்கள் என்றால் அதில் தவிர்க்க முடியாத, தலைசிறந்த பல பாடல்களில் இவர் பாடலும் இடம்பெற்றிருக்கும் என்பதும், இரண்டு அல்ல மூன்றாவது […]

Categories
சினிமா

மதராஸி- திரை விமர்சனம்

என்ன சொல்கிறார் மதராஸி?மதராஸி என்பது நாம் இந்தி பேசும் மக்களை வடக்கன் என்று சொல்வது போல, இந்தி பேசாதவர்களை அவர்கள் அழைக்கும் பெயராகும். இப்போதெல்லாம் அது வழக்கொழிந்து விட்டது.ரொம்ப பழைய பெயர் இந்த மதராஸி என்பது. ஒருவேளை படத்திலும் புதிதாக பெரிய சரக்குகளைக் களமிறக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்வதற்காகத் தான் இந்த மதராஸி என்ற பெயரை முருகதாஸ் தேர்வு செய்தாரா என்று தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே முழுமையாகக் குறை சொல்வது போல இருந்தாலும், உண்மை அதுதான். ஒரு […]

Categories
கருத்து சினிமா தகவல் தற்கால நிகழ்வுகள்

இரத்தத்தில் கலந்தது சினிமா!

சினிமா . இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று சினிமா. வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதோடு அல்லாமல், கோடி கோடியாகப் பணம்புரளும் ஒரு பெரிய துறையும் கூட. இந்தத் துறையின் தொழில் வாய்ப்பைய நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளிகள் உண்டு என்பதிலும் மாற்றமில்லை. கோடிகளில் சம்பாதிக்கும் கதாநாயகன், நாயகி, இயக்குனரில் துவங்கி , தினக்கூலி பெற்றுக் கொண்டு லைட் பிடிக்கும் லைட் மேன் வரை சினிமா என்ற தொழிலை நம்பி இருப்பவர்கள் […]

Categories
சினிமா

ரோந்த் – சினிமா விமர்சனம்

பல சினிமாக்கள் பொழுதுபோக்குக்காகவே என்றாலும் சில சினிமாக்கள் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனதை நெருடும் சினிமாவாக அமைந்து விடுகிறது. இதில் மலையாளப் படங்கள் அதிகளவில் இருப்பது நிதர்சனம். ஏனென்றால் இன்றளவும் கூட கதையைப் பெரிதாக நம்பிப் படத்தை எடுக்கும் வழக்கம் அவர்களிடையே உள்ளது. கதாநாயகனுக்காக தனியாக மசாலா தூவுவது, மண்ணை அள்ளித் தூத்துவதெல்லாம் அவர்களிடம் குறைவு. அப்படி மனதை நெருடிய சமீபத்திய படம் ஒன்று ரோந்த். மலையாளப்படம், ஆனாலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளிலும் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் […]

Categories
கருத்து சினிமா

திரையில் மட்டும் நல்லவர்?

சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை. அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு. பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது. ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது. தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று […]

Categories
சினிமா

கூலி- வேலை சுத்தமா?

ஒரு வழியாக பல எதிர்பார்ப்புகளைத் தாண்டி உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாகி விட்டது.அரங்கங்கள் நிரம்பி வழியும் கூட்டம். திக்குமுக்காடும் திரையரங்குகள்.முதல் நாள் என்பதால் மட்டுமல்ல, மீதி வரும் மூன்று விடுமுறை நாட்களுக்கும் இருக்கைகள் முன்பதிவு முடிந்து விட்டது. சரி இந்தக் கூலி வாங்கிய பணத்திற்கு திருப்தியாக வேலையைச் செய்தாரா என்பதைப் பார்ப்போம். கதை. எதிர்பாராத புதிய கதையெல்லாம் இல்லை. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் சண்டை, அதுல உடைஞ்சது சுருதிஹாசன் மண்டை.அப்புறம் எப்படி ரஜினி ஜெயிச்சாரு? எதுக்காக இந்த சண்டை, […]