Categories
சினிமா தமிழ்

சமூக நீதி பேசும் நல்ல சினிமா- நந்தன்- சிறுமுன்னோட்டம்

ஒரு கல்லை எடுத்து அதை சிலையாக வடித்து சில மந்திரங்களை சொன்ன பிறகு அது கடவுளாகி விட்டது என்று நம்பும் பல மனிதர்கள் ஏனோ எத்தனை ஆண்டுகளானாலும் கீழ்சாதிக்காரன் தீட்டுக்காரன், தீண்டத்தகாதவன், அவன் நமக்குக் கீழே தான் என்ற எண்ணத்தை மட்டும் மாற்றுவதே இல்லை. ஒரு கல்லை கடவுளாக்கத் தெரிந்த அந்த மனிதர்களுக்கு சக மனிதனை மனிதனாகக் கூட மதிக்கத் தெரிவதில்லை என்ற வருத்தமான சமூகநீதிக் கருத்தை எடுத்துச் சொல்லும் சினிமா தான் நந்தன். நமக்குத் தெரிந்த, […]

Categories
சினிமா தமிழ்

மக்கள் தவறவிட்ட நல்ல சினிமா- ஜமா- விளக்கம் மற்றும் விமர்சனம்

சினிமா என்பதே பொழுதுபோக்குக்காகதான் என்ற வரம்பையும் மீறி சில சினிமாக்கள் நல்ல ஆழமான கருத்துகளையும், சிந்தனைகளையும், சில குறிப்பிட்ட மக்களின் வலியையும் வாழ்க்கை முறையையும் கூட நமக்கு ஆழமாக மனதில் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சில சினிமாக்கள் பிரபலத்துவத்தின் காரணமாக அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. பல சினிமாக்கள் முகம் தெரியாத காரணத்தால் முடங்கி விடுகின்றன. அப்படி முடங்கிப்போன ஒரு சினிமா தான் சமீபத்தில் வெளியான ஜமா என்ற திரைப்படம். இவ்வளவு விமர்சனம் பேசும் நானே கூட அந்த […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

மில்கா சிங்- பறக்கும் சீக்கியரின் நினைவுகள்

மில்கா சிங். (நவம்பர் 20,1929 – சூன் 18,2021) இந்திய தடகள வீரர். தனது மின்னல் வேக ஓட்டத்திற்காக பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டவர். காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் தடகள விளையாட்டில் தங்கம் வென்ற முதல் சுதந்திர இந்தியாவின் வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இவரது இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அது போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரராக இவர் மட்டுமே திகழ்கிறார். […]

Categories
சிறுகதை சினிமா தமிழ்

தீதும் நன்றும் பிறர்தரவாரா – சிறுகதை

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூறு நூலின் வரிகளை முன்வைக்கும் கதை. இது கற்பனை கதையோ அல்லது வாசித்த கதையோ அல்ல. நான் கண்ட சினிமாவை கதையாக்கி இந்த கருத்தையும் முன்வைக்கிறேன். பேபி என்ற சினிமா. பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம். படத்தின் கதை இதுதான். மனோஜின் மனைவி தனது முதல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதால் சற்று மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார். பெரிய பாதிப்பாக இல்லாத காரணத்தால் குணமாகி இரண்டாவது முறை […]

Categories
சினிமா தமிழ்

GOAT- 🐐 சினிமா விமர்சனம்

ஆடு 🐐 வெட்டலாமா? திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் GOAT படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்க விரும்புபவர்கள் எச்சரிக்கையாக அணுகலாம்.  ஒரு பெரிய நடிகரின் படம் அதுவும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இரண்டு மூன்று நாட்களாக திரையரங்குகளில் இணைய வழி முன்பதிவில் யாருக்குமே சரியாக நுழைவுச்சீட்டு கிடைக்காமல், அடித்துப்பிடித்து எப்படியோ ஒரு நுழைவுச்சீட்டைப் பெற்று படம் பார்க்க அமரும் போது எதிர்பார்ப்பு இல்லாமல் அமர முடியாது. அந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் […]

Categories
சினிமா தமிழ்

போகுமிடம் வெகு தூரமில்லை – திரைப்பட விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை. அருமையான வாசகம். அருமையான சினிமாவும் கூட. சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களே சினிமாவில் தனது கால் பதித்த பிறகு தான் மிகப் பிரபலாமானவர்களாக மாறினார்கள். புத்தகங்கள் செய்ய வேண்டிய வேலையை தற்போது சில சினிமாக்கள் செய்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல கதையம்சம் உள்ள சினிமா இங்கே மிகப்பெரிய வெற்றி அடைவதைக்காட்டிலும் மசாலா வகையான படங்களே இங்கே அதிகம் வெற்றி அடைகிறது. மக்களுக்கு கருத்துகளை விட, பொழுதுபோவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் ஒரு வித்தியாசமான, […]

Categories
சினிமா தமிழ்

வாழை – பாராட்டுப் பத்திரம் (திரை விமர்சனம்)

ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்! ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர் கதை தானாம்! அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்,குனிஞ்சி பார்த்தா பூமி,இடையில் அவன்தான் பாரம்.கால் நடக்க நடக்க நீளும் தூரம். மாரி செல்வராஜ் (“ஒரு ஊருல ராஜா” பாடல் வரிகள், இசை சந்தோஷ் நாராயணன்) சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சில சினிமாக்கள், புத்தகங்களைப்போல நல்ல கருத்துகளைத் தருவதாகவும், சில சினிமாக்கள் நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த நல்ல மற்றும் கசப்பான […]

Categories
சினிமா தமிழ்

சினிமா ரசிகனின் நினைவுகள் – ஏவிஎம் ஸ்டூடியோ

நினைவுகளிலிருந்து என்றென்றும் நீங்காத சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என்றென்றும் நம் நினைவில் நிற்கக் கூடியவர்கள் தானே! அப்படி தமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரற்று விளங்கிய AVM Productions ஐ உருவாக்கிய A.V.Meiyappan- அதாவது ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் நினைவு தினம் இன்று. ஆகஸ்ட் 12, 1979 ல் அவர் இயற்கை எய்தியிருந்தாலும் இன்றும் AVM தயாரிப்பின் தனித்துவமான சத்தம் நம் காதுகளை நிரப்பிக் கொண்டு தான் இருக்கிறது. திரைப்படம் துவங்கும் முன்பு டான்…டட்டட்டட்டான்.. என்று ஒரு இசையுடன் AVM […]

Categories
சினிமா தமிழ்

தமிழ் திரைப்பட விமர்சனம் -BOAT

மனிதனை விட கொடிய மிருகமும் உண்டோ? தப்பிப் பிழைத்து உயிருக்காக போராடிய ஒரு பாட்டிக்கும், அவர் பேத்திக்கும் இரவு முழுக்க காவல் தெய்வமாய் நின்ற யானை! சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஒரு மிருகத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. அதேபோல் இன்னொரு செய்தியும் உண்டு. கேட்பதற்கே இனிமையானது. பசியென்று வந்த யானைக்கு அண்ணாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த மனிதன். இது பரைசாற்றுவது ஒன்று தான். இந்த கேடு கெட்ட உலகில் மனிதனை விட கொடிய மிருகம் எதுவுமில்லை. […]

Categories
சினிமா தமிழ்

பழைய பொக்கிஷ திரைப்படம் – நூறாவது நாள்

1984 ல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு த்ரில்லர் படமா என்று வியக்க வைக்கும் ஒரு தமிழ் திரைப்பட பொக்கிஷம். மணிவண்ணன் இயக்கத்தில், விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் சத்யராஜ் அவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம். கிட்டதட்ட ஒரு திகில் படத்தைப்பார்த்த உணர்வும் இந்தப்படம் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும். இத்தாலியில் 1977ல் வெளிவந்த sette note in Nero (Seven Notes in black) என்ற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் நூறாவது […]