Categories
சினிமா தமிழ்

பழைய பொக்கிஷ சினிமா: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

தமிழ் படங்களில், ஏன் தென்னிந்திய படங்களில் ஒரு புதிய முயற்சியாக இந்தப்படம் முழுநீள வண்ணப் படமாக வந்த முதல் படம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அதற்கு முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள் தான். இந்த வண்ணப்படமானது Gevacolor என்ற முறையில் படமாக்கப்பட்டது.Gevacolor என்பது பெல்ஜியத்தில் கேவர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓடும் படத்தை வண்ணப்படமாக்கும் உத்தி. இந்தப்படமானது இந்தியில் வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் ரீமேக். The Arabic Nights என்ற புத்தகத்தில் வந்த கதையை மையமாக […]

Categories
சினிமா தமிழ்

இந்தியன் 2 : ஒரு பார்வை

திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் எச்சரிக்கையாக அணுக்கலாம்.  சென்ற வாரம் நமது பக்கத்தில் இந்தியன் படத்தின் எதிர்பார்ப்புகளை பற்றி அருண் பாரதி அவர்கள் எழுதியிருந்தார். பலத்த எதிர்பார்புகளுடன் வந்த திரைப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற வில்லை. சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றுவதை பார்த்தல் படம் ரொம்ப மொக்கையாக இருக்கலாம் என்று உத்தேசித்து நானும் விட்டுவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தின் பாடல்கள் என்னோடு ஒட்டிக்கொண்டன. […]

Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: சத்யஜிட் ரே

திரைப்படம் என்பது பெரும்பாலான சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்றாலும், அது வெறுமனே பொழுதுபோக்கு என்ற ரீதியில் மறந்து விடக்கூடியதல்ல. ஒவ்வொரு திரை ரசிகரின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களின் நினைவுகளும் நம்மில் நிலைத்திருப்பது என்னவோ உண்மை. அப்படியான ஒரு திரை ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித்ரே. யதார்த்தமாக ஒருவர் ஏதாவது திரைப்படத்தைப்பற்றி விமர்சிக்கும் போது, மனசுல பெரிய சத்யஜித்ரே்னு நினைப்பு என்று சொல்லப்படுவது உண்டு. ஏனென்றால் அவர் இயக்குனரோடு அல்லாமல் திரை விமர்சகராகவும் இருந்தவர். மேலும் […]

Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்புச் சக்கரவர்த்தி திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பில்லாமல் தமிழ் சினிமாக்களை நினைவு காண முடியுமோ? “வரி , வட்டி , திரை , கிஸ்தி” என்று கம்பீரமான வீரபாண்டிய கட்டபொம்மனாக நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கணேசமூர்த்தி ஆகிய சிவாஜி கணேசனுக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்து தான் நடிப்பில் ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாடு, ஏழு வயதில் பெற்றோருக்குத் தெரியாமல் நாடக சபையில் போய் இணையும் அளவிற்கு லட்சியமாக உருவெடுத்தது. சிறுவயதிலேயே […]

Categories
சினிமா தமிழ்

Come Back இந்தியன்

பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.

நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.

Categories
சினிமா தமிழ் வரலாறு

Is Paris burning?

இந்த வார்த்தைகளுக்கு ஒரு செவி வழிக்கதை உண்டு.
அதில்லாமல், இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும், ஒரு சினிமாவும் வந்திருக்கிறது. அதுவும் ப்ரெஞ்சில் வெளியான மிகப்பிரபலமான திரைப்படங்களுள் ஒன்று.

Categories
சினிமா தமிழ்

அதே கண்கள்

பழைய பொக்கிஷ சினிமா 1967 ல் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். 1967 ல் சஸ்பென்ஸ் த்ரில்லரா என்று வியப்பு ஏற்படலாம்! ஆனால் இந்தப்படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு சஸ்பென்ஸ் படமா? என்று கண்டிப்பாக வியப்பு ஏற்படும். படம் துவங்கும் முதல் காட்சியில் படத்தின் இயக்குனர் , த்ரிலோகச்சந்தர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.“தயவு செய்து படத்தின் கதையை வெளியே சொல்ல வேண்டாம்” என்று. இப்படி ஒரு புதுமை, தமிழ் சினிமாவில் அதுவரை நிகழ்ந்தது இல்லை. […]

Categories
சினிமா தமிழ்

துணிவே துணை

பழைய பொக்கிஷ சினிமா சினிமா என்றாலே கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என பல கூறுகளின் ஒருங்கிணைப்பு. ஆனால், சில படங்கள் ஒரே கூறின் மூலம் முத்திரை பதிக்கின்றன. இந்தப்படத்தின் கதாநாயகன் ஜெய்ஷங்கர் என்றாலும் இந்தப்படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான். பழைய படத்தில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா என்று நாம் அசந்து போகும் அளவிற்கு திரைக்கதை அமைந்த படம். ரிப்பீடட் சீக்வென்ஸ் எனப்படும் ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும் திரைக்கதை, 1976 லேயே ஒரு […]