வேலைனு வந்துட்டா நாங்கல்லாம் கம்ப்யூட்டர் மாதிரி. மேசைல காகிதம் இருந்தா கையெழுத்துப் போட்டுத் தள்ளிருவோம். அது எங்களோட இறப்புச் சான்றிதழாவே இருந்தாலும் சரி என்று நிரூபித்திருக்கிறார் இந்த வட்டாட்சியர். சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் ஒரு விவசாயி தனது வருமானச் சான்றிதழை விண்ணப்பித்திருக்கிறார். அவரது வருமானத்தை மாதம் 2500 ரூ என்றும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லி விண்ணப்பித்திருக்கிறார். தகவல்களை நேர்மையாக சரிபார்த்த அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அவருக்கு சான்றிதழ் […]
