Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அகமதாபாத் பரிதாபங்கள்-2

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் பண்பு. ஆனால் அதைப் பின்பற்றி மீள் குடியேற்றம் செய்து சிறப்பாக வாழ்வது பெரும்பாலும், வட இந்தியர்கள் தான். அதாவது தமிழ் பேசாத பிறமொழி இந்தியர்கள்.அவர்கள் இங்கே வந்து நமது ஊர் பாதுகாப்பானது , சுகாதாரமானது, நல்ல வேலை வாய்ப்பு வசதி உடையது என்பதை உணர்ந்துகொண்டு இங்கே தங்கி யாவரும் கேளிர், இதுவும் எனது ஊரே , இங்கேயே நான் குடியேறி, ரேஷன் வாங்கி வாக்களிக்கவும் செய்வேன் என்று இங்கேயே […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் பலர், அப்படியும் சிலர்

பறவைகள் மட்டுமல்ல மனிதர்களும் பலவிதம் தான். இந்த பூமியானது பல விதமான மனிதர்களை உள்ளடக்கியது என்பதை நேற்று நடந்த இருவேறு சம்பவங்களின் மூலமாக அறிந்திட முடிகிறது. முதலாவது, நமது சென்னை மாநகரில் கண்ணகி நகரில் வசிக்கும் ஒரு தூய்மைத்தொழிலாளி பெண், காலை எழுந்து பணிக்குச் செல்லும் போது, தேங்கிக் கிடந்த மழைநீரில் காலை வைத்து, மழைநீரில் கசிந்திருந்த மின்சாரம் காரணமாக, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்.இது இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல. மழைநீரில் மின்சாரம் கசிவதும் அதனால் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஏமாற்றாதே,ஏமாறாதே!

மோசடி.மனிதனின் தேவை அளவோடு இருந்த போது மோசடி என்பது குறைவாகவே இருந்தது.உணவு, உடை, இருப்பிடம் மட்டும் போதும் என்று வாழ்ந்த காலத்திலும், ஏன் நாகரீகம் என்ற ஒன்று இல்லாத காலத்திலும் மோசடி என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பணமும், பகட்டும் நவநாகரீக வாழ்வும் வளர வளர, மனிதனின் ஆசையும் வளர, மோசடி என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. பிச்சைக்காரன் முதல் தங்கத்தட்டில் உணவருந்தும் பணக்காரன் வரை ஒரே பூமியில் தானே வாழ்கிறான்.ஆக ஒருவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஆகஸ்ட் 22, சென்னை தினம்!

ஆகஸ்ட் 22, சென்னைக்குப் பிறந்தநாள். சொந்த ஊர் தான் சொர்க்கம், சொந்த ஊரைத்தாண்டி வேறென்ன பந்தம் இருந்துவிடப் போகிறது வாழ்வில் என்ற கதையெல்லாம் சென்னைக்கு எடுபடாது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலுள்ள எல்லா ஊர்களிலும் உள்ள பெரும்பாலான ஆட்களுக்கு சென்னையோடு ஒரு பந்தம் இல்லாமல் இருக்காது. எனக்கும் அப்படித்தான். சிறு வயதில் மெட்ராஸ் என்ற ஊர் இருப்பதும், அந்த ஊருக்கு இரவு பேருந்தில் ஏறினால், காலையில் போய் தான் இறங்கலாம் என்றும், அங்கு சென்று நம்ம தெரு ஆட்கள் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

தெரு நாய்கள் தொல்லை!!

சமீபத்தில் மிக அதிக அளவில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம் தெரு நாய்கள் பற்றியது தான். 🐶 நாய் என்றால் பிடிக்காத மனிதர்கள் ஒரு சிலரே உண்டு. அந்த ஒரு சிலரைத் தவிர்த்து மீதி மனிதர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நாய் என்பது செல்லப் பிராணி தான். செல்லப்பிராணி தானே ஒழிய வீட்டிற்கு வீடு நாய் வளர்க்கிறார்களா என்றால் அது கிடையாது. குறிப்பிட்ட ஆட்கள் அதிலும் குறிப்பாக செல்வந்தர்களே பெரும்பாலும் நாய்களை வளர்க்கிறார்கள். சிலர் கௌரவத்திற்காகவும், பலர் பாசத்திற்காகவும். […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

வேகமாய்ப் பரவும் போலிச் செய்திகள்!

இணையதளத்தில் செய்திகள் எவ்வளவு வேகமாக நம்மை வந்தடைகிறதோ அதேபோல போலிச் செய்திகள் சிலவும் நம்மை எளிதாக வந்தடைவதோடு இல்லாமல் நம்பும் படியாகவும் அமைந்து விடுகின்றன. அதில் நன்மை, உடல் ஆரோக்கியம் உணவுப் பழக்கம் என்று துவங்கி, மத வழிபாடு வரை, போலி வதந்தி ஆகியவை பரப்பப்படுகின்றன. இதன் ஆரம்பப் புள்ளிஎன்ன? எதற்காக இது நிகழ்கிறது என்பது தான் விளங்குவதில்லை. அந்தக்காலங்களிலாவது ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் 10 பைசா முதல் 1 ரூ வரை கட்டணம் இருந்தது. அப்படியிருக்க […]

Categories
இலக்கியம் தகவல்

தினுசு கண்ணா தினுசு!

பெயர் என்பது ஒரு மனிதனின், பொருளின், ஜீவராசிகளின் அடையாளம். மனிதன் மட்டுமல்ல, உலகிலுள்ள உயிருள்ள உயிரற்ற அத்தனை பொருட்களுக்கும் ஒரு பொதுப் பெயரும், ஒரு தனிப்பெரும் கூட உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் உண்டு. உதாரணம்: நாற்காலி. நான்கு கால்களை உடைய காரணத்தால் அது நாற்காலி என்று அழைக்கப்பட்டது. சில பெயர்களின் பின்னால் சுவாரஸ்யமான கதைகளும் இருக்கலாம். பழைய காதலன் காதலியின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைப் போல. சில பேர் குரு பக்தியின் காரணமாகவோ அபிமானத்தின் […]

Categories
அரசியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

2026 ஐ எதிர்நோக்கி.

2026 தேர்தலுக்காக எதிர்கட்சிகளும், புதிதாக முளைத்த கட்சிகளும் பல வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், தற்போது ஆளும் கட்சியின் தேவை என்பது, ஆட்சியை முறையாக, நல்ல பல திட்டங்களோடு மக்களின் மனதைக் கவரும் படியாக நிகழ்த்திக் காட்ட வேண்டும்.எந்த வித அவப்பெயரும் ஏற்பட்டு விடக கூடாது. செயல்படுத்தும் திட்டங்களில் பாரபட்சமின்றி தொய்வின்றி மக்களின் பாராட்டுகளைப் பெறும் விதமாக திட்டம் நிகழ வேண்டும். அதை மனதில் கொண்டு, திமுகவும் கன கச்சிதமாக இந்த விஷயத்தை செய்து வருகிறது. ஏற்கனவே […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

உண்மையான சுதந்திரம் எப்போது?

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 65 லட்சம் பேர் என்றால் இரண்டு மாவட்டங்கள் முழுமையாகக் காணாமல் போன கதைதான். சரி அப்படியிருக்க அந்த 65 லட்சம் பேரும் இத்தனை நாளாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தார்கள்? என்ன அடிப்படையில் அது வழங்கப்பட்டது. இதுதான் சரி என்றால், இவ்வளவு பெரிய தவறு இத்தனை ஆண்டு காலமாக இருந்திருக்கிறதா? 65 லட்சம் என்பது சாதாரண […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம். இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த […]