Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

மேடம்,கரண்டு எப்போ வரும்?

முன்னாட்களில் பெரும்பாலான உணவகங்களில் இந்தப் பழக்கம் உண்டு என்று சில சினிமாக்களில் கேலியாகப் பார்த்திருக்கிறோம். சிலர் இதை உண்மை என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் அதிகரித்து விட்டால், சாம்பாரில் கடலை மாவு கலப்பது, நீர் கலப்பது, ரசத்தில் சுடுநீர் கலப்பது போன்ற காரியங்களைச் செய்வார்கள். அதேபோல, வெள்ளை சாதம் வேக வைக்கும் போது சிறிது ஆப்பச் சோடா கலப்பார்கள், ஏனென்றால் அப்படிச் செய்தால் அதிக சாதம் உண்ண முடியாது என்ற காரணம். இது உணவகத்தின் […]

Categories
சினிமா தகவல் நினைவுகள்

வியாதியல்ல மருந்து!

விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம். யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.சிலருக்கு குதிரைப் பந்தயம். இதெல்லாம் பெரிய ரகம். இதற்கடுத்த ரகமும் உண்டு..காலையில் காபி குடிக்காமல் விடியாது.நாளிதழ் இல்லாத நாளில்லை .இது மாதிரி சிலருக்குப் பழக்கம். இன்னும் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

பொருளாதார வளர்ச்சி எனும் கானல் நீர்?

பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கணக்கோ அல்லது கானல் நீரோ? என்ற ஒரு சந்தேகம் ஒவ்வொரு சாமானியனுக்கும் வரலாம்.உண்மைதான். சமீபத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அடைந்து நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிட்டதட்ட இரண்டு மடங்கு இருப்பதாகவும் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது இந்த அரசு. ஆனால் கவனித்துப் பார்த்தால் புரியும்.ஒரு பாமரனுக்கு, ஒரு வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதனுக்கு, ஏன் பொருளாதாரம் ஓரளவு புரிந்த […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் சில மனிதர்கள்!

கபடு வாராத நட்பும்,அன்பு அகலாத கணவனும் , மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் என்று பாடியிருக்கிறார் பட்டர். சந்தானம் அதாவது, குழந்தைகள் நல்வழியில் நடப்பவர்களாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பு குறையக் கூடாது எனவும் பாடியிருக்கிறார். இது அப்படியே கிடைத்திருக்கிறது ஸ்பெயின் நாட்டில் வாழும் இந்த தம்பதிக்கு.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாதவர்கள். அதேபோல, அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் நல்ல குழந்தை, பெற்றோரின் மீது அளவற்ற அன்பும், நல்ல பண்பும் உடைய குழந்தை. என்ன ஒரே ஒரு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மீண்டுமொரு ஆணவப்படுகொலை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இதைச் சொன்ன வள்ளுவனின் சாதி என்னவென்று தெரியாத காரணத்தால் இன்னும் அவருக்குக் கொஞ்சம் மரியாதை மிஞ்சியுள்ளது. இல்லாவிட்டால், அவர் இந்தக் காரணத்தால் தான் இதைக் கூறினார், அந்தக் காரணத்தால் அதைக் கூறினார் என்று சொல்லி திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி விடுவார்கள். இந்த ஆண்டு 2026. வள்ளுவராண்டு 2056. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று 2056 ஆண்டுகளாகப் படித்து விட்டு, ஒரு இளைஞன், மாற்று சமூகத்தில் உள்ள பெண்ணிடம் பழகியதற்காக, அந்தப் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படி ஒரு சான்றிதழ் பெற முடியுமா?

வேலைனு வந்துட்டா நாங்கல்லாம் கம்ப்யூட்டர் மாதிரி. மேசைல காகிதம் இருந்தா கையெழுத்துப் போட்டுத் தள்ளிருவோம். அது எங்களோட இறப்புச் சான்றிதழாவே இருந்தாலும் சரி என்று நிரூபித்திருக்கிறார் இந்த வட்டாட்சியர். சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் ஒரு விவசாயி தனது வருமானச் சான்றிதழை விண்ணப்பித்திருக்கிறார். அவரது வருமானத்தை மாதம் 2500 ரூ என்றும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லி விண்ணப்பித்திருக்கிறார். தகவல்களை நேர்மையாக சரிபார்த்த அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அவருக்கு சான்றிதழ் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

பிரியாணி அண்டா கவிழ்த்தப்பட்டது!

மனிதர்களில் பல ரகம். அன்பின் வடிவான அன்னை தெரசாவும் மனிதன் என்ற பிரிவு தான். கள்ளக்காதல் இச்சைக்காக, உடல் சுகத்துக்காக, கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, பெற்ற இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்வளும் மனிதப் பிறவி தான். “அபிராமி, அபிராமி… மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது.” சமைக்கும் போது மனக்கும் பிரியாணி்போல, சாப்பிடும் போது ருசிக்கும் மசாலா போல, உவமிக்க இயலாத உன்னத காதல். டிக்டாக்கில் உருவாகி டக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

எனக்குக் கிடைத்த பரிசு!

நான் எழுதிய எழுத்துக்குக் கிடைத்த பரிசு , எனது சமூக வலைத்தள பக்கம் முடக்கம். நமது முந்தைய பதிவான கிட்னி விற்பனை செய்து வாழ்வு நடத்தும் அவல நிலை என்ற பதிவின் காரணமாக என்னுடைய பக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து நான் இந்த எழுத்துக்களின் வழியாக நண்பர்களோடு, உறவுகளோடு ஒரு தொடர்பில் இருக்க விரும்புவதால் புதிய கணக்கைத் துவங்கியுள்ளேன். தினசரி நமது நினைவுகள் பக்கத்தில் பதிவிடப்படும் கட்டுரைகளை சராசரியாக 30-40 நபர்கள் வாசித்து வரும் காரணத்தால் , இதைத்தொடர்ந்து […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வணிகம்

ஏமாந்து கொண்டே இருக்கிறோமே?

அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ. அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே. இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள். குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று. ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் […]

Categories
சிறுதுணுக்கு தகவல் நினைவுகள்

The kiss of life.

1967 ம், ஆண்டு எடுக்கப் பட்ட “The Kiss of Life.” என பெயரிடப் பட்ட புகைப்படமே இது, ராண்டல் மற்றும் தொம்சன் ஆகிய இருவரும், வழமையான எலேக்ரிசிட்டி பவர் கேபிள் மீது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீர் என, ராண்டல் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு அடுத்த வினாடியே, அந்த வயர்களில் சிக்குண்டு நினைவிழந்து போகிறார். அவர் கீழே, விழாமல் தாங்கிப் பிடித்த தொம்சன், செயற்கை சுவாசம் கொடுக்கும் போது எடுக்கப் பட்ட படமே இது […]