சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் அதன் பாய்ச்சல் என்பதோ, ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சாமானியன் என்றால் உடனடியாகப் பாய்ந்து விடுவதும், பணம் பதவியில் இருந்தால் கொஞ்சம் பக்குவமாகப் பாய்வதும் என்பது பழகி விட்டது. இன்று ஒரு தினசரியில் ,ஒரே பெட்டிக்குள் அடுத்தடுத்து இரண்டு குட்டிச் செய்திகள். இரண்டும் பெண்னை பலவந்தப்படுத்தியதும், பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பற்றிய செய்திகள் தான். இரண்டுமே சென்னையில் நிகழ்ந்த சம்பவம் தான். முதலாவது வடசென்னையிலும், இரண்டாவது துரைப்பாக்கம் பகுதியிலும் […]
Tag: தற்கால நிகழ்வுகள்
சினிமாவை மிஞ்சிய நிஜம்.

படங்கள் சில நேரங்களில் நடப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் எடுக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு படம் மற்றும் சம்பவம் பற்றிய ஒரு பதிவு தான் இது. தற்போது பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்து இங்கு அறியாதோர் இல்லை. 6 வருடங்கள் கடந்துவிட்டாலும் அந்த பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான முறையில் தண்டனை கிடைத்திருப்பது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி தான். இந்தக் குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து புகார் அளிக்கவில்லை.. ஆனால் குற்றவாளிகளே தாம் செய்த தவறுகளுக்கு […]

பொதுவாக நலத்திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்கள் மேம்படுவதற்காக அரசாங்கத்தால் செய்யப்படும் சமுதாய முன்னெடுப்பு நடவடிக்கைகள். தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கட்டணச்சலுகை இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அடிப்படையாகத் துவங்கிய இந்த நலத்திட்ட உதவிகள், பஸ் பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து , இன்று மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மாதமாதம் பணம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இப்படி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையானது அவர்கள் படித்த பள்ளி, அதாவது […]
டீயை விட கப் சுடுதே!

இரு நண்பர்களின் சந்திப்பு. நபர் 1: அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க மாப்ள. காலி .9 இடத்துல டமால் டமால் டமால் னு சும்மா தெறிக்க விட்ருக்காங்க. நபர் 2: ஆமா யா , ஆபரேஷன் சிந்தூர் னு பேர்லாம் வெச்சி, 2 பெண் இராணுவ அதிகாரிகள பத்திரிக்கை சந்திப்பில் பேச வச்சி ,சினிமா வை விட பெரிய அளவுல மக்கள் மனசுல ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திட்டாங்க.தீவிரவாதிகளுக்கு நல்ல பாடம். நபர் 1: இதோட நிறுத்தக்கூடாது. அவனுங்களுக்குத் தண்ணி […]
பொறுப்பில்லா சில ஊடகங்கள்.

ஊடகங்கள் என்பது நீதித்துறை போல நாட்டின் மிகப்பெரிய தூண். ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியும், வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையும் ஊடகத்தைச் சார்ந்தது தான். அதுவும் இன்றைய நிலையில், ஆனையைப் பூனையாகவும், பூனையை ஆனையாகவும் மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு சினிமா, ஒரு தனிப்பட்ட நபர் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் திறனுடையது ஊடகம். அப்படிப்பட்ட ஊடகங்களில் வேலை செய்யும் ஆட்கள் […]
ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்காரர்கள், தமிழ்நாட்டில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார்கள். காஷ்மீரில் நிகழ்ந்த படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமாம். அடப்பாவிகளா! அப்ப கொரோனா ல மக்கள் இறந்து போனா கொரோனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவாங்க போல. இது மாதிரி ஒரு சினிமாவுல, நோய்க்கு எதிரான போராட்டம்னு RJ பாலாஜி நகைச்சுவை செஞ்சிருப்பாரு. அதேமாதிரி தான் இருக்கு இவனுங்க செஞ்சது. உண்மையிலேயே இந்தப்போராட்டம் என்ன கோரிக்கையோட இருந்திருக்கனும்னா, பாதுகாப்பு சரியாகத் தராமல், […]
இது விபத்தல்ல, கொலை!
கொலை என்பது திட்டமிட்டு, ஒருவரைத் துப்பாக்கி வைத்து சுடுவதும், அல்லது கத்தி வைத்துக் கிழிப்பதும் மட்டுமல்ல. ஒரு சுமாரான போக்குவரத்து இருக்கும் சாலையில் 20 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி வைத்து விட்டு அதை மறிக்காமல், மாற்று வழிப்பதாகைகள் வைக்காமல் அந்தப்பள்ளத்தில் அந்த வழியாகப் பயணித்த ஒரு குடும்பத்தில் இருவர் விழுந்து இறந்தால், அதுவும் கொலை என்று தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆமாம் இது விபத்து தான்.ஆனால் அந்த விபத்து நிகழக் காரணம் என்ன தெரியுமா? […]

பயணம் என்றாலே மகிழ்ச்சி தான், அதுவும் ரயில் பயணம் என்பது ஒரு தனி அனுபவம் தான். அப்படியான ரயில் பயணங்கள் நமக்கு சில நேரங்களில் கசப்பான அனுபவத்தையும் தரும். அதை நாம் முன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். அதைப்போலவே கடுப்பேற்றிய இன்னொரு பயணத்தைப் பற்றிய பதிவு தான் இது. பணிநிமர்த்தமாக ஹைதராபாத் பயணம்.தனக்குத் தேவை இருக்கும் வரைக்கும் தான் கடவுளுக்கும் இங்கே அர்ச்சனை என்ற ரீதியாக, எங்களை தங்கள் பணிக்கு அழைத்த தனியார் நிறுவனம், சென்னையிலிருந்து ஹைதராபாத் […]
டூரிஸ்ட் பேமிலி- திரை விமர்சனம்.

ஒரு நல்ல சினிமா சொல்லாமலே வெல்லும் என்று நிரூபித்திருக்கிறது, இந்த வாரம் சத்தமே இல்லாமல் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வாழ முடியாமல் அகதிகளாக தமிழ்நாட்டிற்குள் திருட்டுத்தனமாக எந்த வித அனுமதியும் இன்றி நுழையும் ஒரு குடும்பம் என்ன ஆனது எப்படி ஜீவித்தது என்பதே படத்தின் மையக்கதை. அந்தக் குடும்பம் ராமேஸ்வரத்தில் நுழையவும், அங்கே ஒரு குண்டு வெடிப்பதும் என ஒரு மர்ம முடிச்சு படம் முழுக்க அந்தக் குடும்பத்தைப் […]
ஏமாற்றப்படும் நாம்!

2016 ஆம் ஆண்டில் நான் எனது முகப்புத்தகத்தில் எழுதியிருந்த விளம்பர ஆதிக்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் தந்திரம் பற்றிய ஒரு பதிவு.அன்றே நண்பர் சிவப்ரேம் இந்தப்பதிவைப் படித்து வியந்து பாராட்டினார். பதிவின் சாராம்சமான, இளநீர் பெட் பாட்டிலில் அடைத்து விற்கப்படலாம் என்ற விஷயம்,, வெளிநாடுகளில் துவங்கி விட்டதாகச் சொன்னார்.இன்று இங்கேயும் கூட வந்து விட்டது அந்த நிலை. இனியாவது மாறுவோமா? பதிவு கீழே! பிச்சைக்காரன்.. ஒருவனிடம் ஒரு ரூபாய் பெறுகிறான்.. ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் 15 பேர்.. 12 […]