Categories
சினிமா தற்கால நிகழ்வுகள் பாடல்

குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.

இதோ மீண்டும் துவங்கிவிட்டார் இசை அரசன் தமது இம்சையை. குட் பேட் அக்லி படத்தில் தனது பழைய பாடல்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஐந்து கோடி பணம் தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தேவையா என்று நாம் பேசினால் அதெப்படி தவறாகும் என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். இப்போது இளையராஜாவின் இந்தச் செயல் தேவையில்லாத ஒன்று என்று பேசுபவர்கள் இளையராஜாவின் ரசிகர்கள் அல்ல என்றும், மேலும் அவர்களில் சிலருக்கு ஜாதிய கட்டமைப்புப் பின்புலமும் தீவிரமாக […]

Categories
தற்கால நிகழ்வுகள்

இ(து)ன்பச் சுற்றுலா!

இரு நண்பர்களுக்கிடையிலான உரையாடல். நபர் 1: என்ன மச்சான் வெயில் இந்தப் பொள பொளக்குது.நபர் 2: ஆமா, மச்சான்.இப்பத்தான் சித்திரை பிறந்திருக்கு.இப்பவே வெயில் இப்படி இருக்குனா இன்னும் அக்னி வெயில்லாம் வரப்ப நம்ம உசுரோட இருப்போமானே தெரியலியே மச்சான். நபர் 1: ஆமாடா இதுல இந்த சனியன் புடிச்ச டிராபிக் வேற. ச்சேய். காலைல நல்லா குளிச்சி மொழுகி பளபளனு வேலைக்குக் கிளம்பினா, வேலைக்குப் போயி சேரக்குள்ள எம் மூஞ்சியே எனக்கே அடையாளம் தெரியாத போயிடுது மச்சான். […]

Categories
தற்கால நிகழ்வுகள்

முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?

இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தேவையா சாமி இது?

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ இது நமது அதிமுக வின் முன்னாள் ஒப்பற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமாவில் வந்த பாடல் வரிகள்.இந்தப் பாடல் வரிகளை இப்போது அவரது பெயரைச் சொல்லி கட்சி நடத்திப் பதவியில் அமர ஆசைப்படும் அவரது விசுவாசிகளுக்குப் பாடிக் காட்ட […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறை

கோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு பிசாசுகளையும் 20 நாளைக்கு இங்க அனுப்பிருவா. […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

போதையில் தடுமாறும் பாதை

போதை. இந்த வார்த்தையைக் கேட்டவுடனே நாம் யூகிக்கும் இணைப்புச் சொற்கள் மது, கஞ்சா, சிகரெட், புகையிலை, இப்போது, கொக்கைன், ஹெராயின், போன்றைவையும் இணைப்பில் சேர்ந்து விட்டன. ஆம் தற்போதைய தேதியில் இவையும் புழக்கத்தில் இணைந்து விட்டதாகச் செய்தி. இதிலும் தரம் உண்டு. கஞ்சா அடிப்பவன் மது போதைக்கு அடிமையானவனை விடக் கேவலமானவன்.மது குடிக்கும் போதைக் கைகள் கூட, கஞ்சா அடிப்பவர்களைக் கண்டால் , அவன் கஞ்சாக்குடிக்கிப் பய என்று வசைபாடுவார்கள். காரணம் மது போதையை விட வீரிமயான […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.

நுகர்வு… நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு. இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம். அண்ணன் வடை குடுங்கனே என்றேன் எத்தனை என்று கேட்டார் அண்ணன். ஒரு வடை போதும்னே என்றேன். தம்பி 3 பத்து ரூபா என்றார். இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3 வடை சாப்பிட்டா வெளங்கிடும் என்று விளக்கம் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தலைதூக்குமா தவெக?

தமிழக வெற்றிக் கழகம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர். திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால், மாற்றுக் கொள்கைகள் கொண்ட பாஜக, காங்கிரஸ் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]

Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]