Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மூடநம்பிக்கையை மட்டும் எரிப்போம்.

உண்ண உணவு, உடுக்க இடை, இருக்க இருப்பிடம், இவை மட்டுமல்ல மனிதனின் அடிப்படைத் தேவைகள்.நல்ல குடிநீரும், தூய்மையான காற்றும் நமது வாழ்வாதாரம் மற்றும் வாழ்வின் அடிப்படை உரிமை. அப்படியிருக்கும் பட்சத்தில் தான் தரமான நல்ல குடிநீர் வழங்குவதில் அரசாங்கம் இத்தனை மெனக்கெடுகிறது. சமீபத்தில் இந்தூரில் குடிக்கும் நீரில் கழிவு நீர் கலந்து, சில உயிர்கள் போனது கண்டு நாம் எவ்வளவு வேதனை கொண்டோம்?அது அரசாங்கத்தின் தவறு என்பதால் எளிதாக அதன்மீது பழியும் போட்டு விட்டு துக்கம் அனுசரித்து […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மனிதநேயத்திற்கு தண்டனையா?

மாயமாகப் போகும் மனிதநேயத்தையும் அன்பையும் கேள்வி கேட்டு இன்னும் காணாமல் போக்குகிறது நமது சட்டமைப்பு. சமீபத்தில் தெருநாய்கள் கட்டுப்பாடு சம்பந்தமான வழக்கு வாதம் உச்சநீதிமன்றத்தில் வந்திருந்த போது தெருநாய்கள் கட்டுப்பாடுகளைப் பற்றி உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு சில கேள்விகளை எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. தெருநாய் கடித்து யாருக்காவது பிரச்சினைகள் வரும்பட்சத்தில், அதாவது ரேபிஸ் தடுப்பூசி போடாமல் விடப்பட்ட தெருநாய்களால் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் மாநில அரசுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஒரு மாநில […]

Categories
ஆன்மீகம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

ஏதாவது செஞ்சுவிடு ஐயப்பா!

கார்த்திகை, மார்கழி என்றாலே சபரிமலை மற்றும் ஐயப்பன் சீசன் என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்பதுண்டு. மேலும் இணையங்களிலும் , வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் அருள்பாலிக்கத் துவங்கி விடுவார். மற்ற மாதங்களில் ஐயப்பனை மறந்தும் , மறைத்தும் விடுவார்களோ என்ற அளவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனைப் பற்றிய சம்பாஷனைகள் அதிகரிப்பது வழக்கம். இது கேலிக்காக அல்ல. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் எப்படியான ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்களோ அதே […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பரிசு வாங்கியாச்சா?

பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு தான். தமிழர் பண்டிகை , பாரம்பரிய விழா, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு விழா என்பது இன்றளவிலும் மாறாமல் உள்ளது. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பது பாரம்பரியம் என்றாலும் இன்றளவிலும் விவசாயம் அல்லாத மற்ற தொழில் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அதன் தனிச்சிறப்பு. இதில் சமீப காலமாக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பொங்கல் பரிசுத் தொகுப்பு. எனக்கு விவரம் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பண முதலைகளிடம் உஷார்.

பணம். இன்றைய நிலையில் உலகில் வாழும் அத்தனை ஆறறிவு மிருகங்கள் அனைவருக்கும் அடிப்படை நாதமே பணம் தான்.வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்லாத குரங்கு இல்லை என்பதைப்போல, பணம் வேண்டாம், பணம் தேவையில்லை என்று சொல்லும் மனிதர்கள் இங்கு இல்லவே இல்லை என்பது தான் எழுதப்படாத உண்மை. மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மறதி வியாதி உள்ளவர்களும், 100 ல்0.00001 சதவீத வித்தியாசமான மனிதர்களைத் தவிர்த்து மீதி அனைவருமே பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடக்காரணம், உணவு , உடை […]

Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பயனாளர்களே இது மரியாதையல்ல!

இன்றைய சமூக வலைத்தளங்களிலும் , வாட்ஸ் அப் செய்திகளிலும் ஒரு விஷயத்தைப் பரவலாகப் பார்க்க முடிந்தது . அரசாங்கம் மாணவர்களுக்காக அளித்த மடிக்கணினியில் உள்ள முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்களை , அசிட்டோன் அல்லது தின்னர் கொண்டு அளித்து அதை மகிழ்ச்சியாக காணொளிப் பதிவு செய்து அதைப் பரவச் செய்திருக்கிறார்கள். சிலர் அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதை மறைத்திருக்கின்றனர். இதை விளம்பரப்படுத்தி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

அரசு மருத்துவர்களின் தரமான சம்பவம்!

அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிப்பதும், அங்கே நம்மால் சமாளிக்க முடியாது, நமக்கெல்லாம் அது சரியா வராது என்றும் இன்றளவிலும் பல மக்கள் மனிதில் ஆணித்தரமாக நம்புகின்றனர். இது உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது.அரசு மருத்துவமனைகளின் கடைநிலை ஊழியரில் துவங்கி ஒரு சில மருத்துவர்கள் வரை இப்படி மக்கள் நினைப்பதற்குக் காரணமாகவும் நடந்து கொள்ளத் தான் செய்கின்றனர். தான் அரசு வேலையில் இருப்பதால் ஒரு திமிரான நடைமுறை, ஓசியல மருத்துவம் பாக்க வந்த உனக்கென்ன மரியாதை என்ற […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் ஏமாறலாமா?

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து மக்களை அடிமையாக்குவதோடு அல்லாமல் முட்டாள்களாகவும் மாற்றி மோசடி செய்து அவர்களை ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் இவையெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தன. நமது ஓய்வு நேரத்தில் சில நிமிடங்கள் இதில் ஒதுக்கினோம்.இப்போது அந்த நிலை மாறி இவற்றைப் பார்ப்பதில் இருந்து சில நேரம் ஒதுங்கி இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அளவைத் தாண்டிய அறவியல் வளர்ச்சியும், அலைபேசி வசதி […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அடடே இதுதான் சங்கதியா?

உலகில் நம்மைச்சுற்றி சில விசித்திரமான விஷயங்கள் நமக்குப் புரியாத தெரியாத நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நான்கு புது இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் அந்த இனிமையும், அந்தப் புது அனுபவமும் வேறு எதுவும் தர இயலாது. அப்படி எனக்கு பணி நிமிர்த்திமாக தமிழ்நாடு தாண்டி சில இடங்களைக் காண வாய்ப்பு அமைந்தது. அதில் எனக்குப் பிடித்தமான நாசிக் பற்றி எழுதியிருந்தேன்.அகமதாபாத் சென்றிருந்த போது அந்த ஊர் இன்றளவிலும் […]

Categories
அரசியல் கருத்து சினிமா தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

சினிமாவை அரசியல் ஆக்க வேண்டாமே!

சினிமா . தெருக்கூத்து, மேடை நாடகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி. மேற்சொன்ன இரண்டும் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லும் அளவில் தான் இருக்கின்றன. ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களை உலகம் போற்றி வியந்த கதைகளை நாம் இன்று செவி வழிச் செய்தியாகத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.பம்மல் சம்பந்தனார், சங்கரதாச சுவாமிகள் போன்ற நாடக ஆசிரியர்களின் பெருமையை அறியாத தலைமுறை நமது. ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த கட்ட பரிணாமமான சினிமா அதைக்காட்டிலும் உச்சகட்ட […]