அமீபா.இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது. எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் […]