Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

புலியைப் பார்த்து பூனை கோடிடலாமா?

பலதரப்பட்ன உணவு மற்றும் அதன் சுவை என்பது இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.சமூக வலைத்தளங்களான யூடியூப் ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எங்கு சென்றாலும், இந்த உணவுப் பிரியர்களின் அட்டகாசம் தாங்க இயலவில்லை. மிக யதார்த்தமாக ஆரம்பித்த இந்த உணவுப் பிரபலத்துவமும் விளம்பரமும் இப்போது கடும் போட்டியாகிப் போனது. காலையில் அவசரமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக பொள்ளாச்சி அருகிலுள்ள தோப்புக்குச் சென்று பிறகு குளிப்பதற்காக சிறுவாணி பக்கம் வரும் வழியில் ஈரோடு நகரிலே உள்ள ஐயப்பன் உணவகத்தைப் பற்றி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழித்த ஒழுங்கீனம்

சுய ஒழுக்கம், மனசாட்சி என்பதையெல்லாம் மறந்து விட்டால்,மனிதனுக்கும், கொடிய மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. படித்தவன், படிக்காதவன், அவனது பின்புலம், பூர்வீகம் என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே அல்ல. முள்செடியில் மலரும் உண்டு, பூக்களில் விஷமும் உண்டு என்பதைப் போல, ஒரு மருத்தவர் கேவலம் 25 சவரன் நகைக்காக ஒரு இளம்பெண்ணை துடிக்கத் துடிக்க மூச்சடைத்துக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த மனவேதனையத் தருகிறது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் வரலாறு

உயரமான செனாப் பாலம் உருவான வரலாறு.

உலகின் மிக உயரமான ரயில் பாலம்.செனாப் ஆற்றின் குறுக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆற்றுப் படுக்கையிலிருந்து 359 மீட்டர் அதாவது 1180 அடி உயரத்தில் கம்பீரமாக உலகே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உயர்ந்த அந்தப் பாலத்தில் நம் நாட்டின் தற்போதைய பிரதமர் திரு.மோடி அவர்கள் கம்பீரமாக மூவர்ணக்கொடியோடு நடந்து வர, அதை அந்தக் கட்சியினர் தம் கட்சிக்கே உரிய சாதனை போல, சமூக வலைத்தளங்களில் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

தாய் மொழியும், தந்தையின் ஊரும்

சொந்த ஊர் , மொழி என்பது எப்போதும் ஒரு தனி உணர்வு தான் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் பற்றியோ அல்லது சொந்த ஊர் சம்பந்தமான ஆட்களைப் பற்றியோ, பேசும் போதும், அவர்களைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது பழக நேர்ந்தாலோ அது ஒரு தனி இன்ப உணர்வு. இன்னும் சிறிது நேரம் இவர்களோடு உறவாடக்கூடாதா, என்று மனம் ஏங்கும்.ஆனாலும் பணியோ சூழ்நிலையோ அதை அனுமதிக்காத போது கனத்த இதயத்தோடு, அவர்களிடம் விடைபெற்று, அப்பப்ப […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஆசிரியர்களின் அவல நிலை

கல்லூரி, பள்ளி நிர்வாகம், பல்கலைக்கழக குழு, சமுதாயம், கொரோனா, இப்படி பலவும் அடித்து துவம்சம் செய்த ஆசிரியர் ( குறிப்பாக தனியார் பள்ளி, கல்லூரி) சமுதாயத்தை, இன்னும் மாணவர்கள் மட்டும் தான் அடிப்பது பாக்கி. அதுவும் இப்போது ஆங்காங்கே நிகழ்கிறது. ஒரு ஒழுக்கமான, நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உழைப்பது தான் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் வாழ்வில் செய்யும் தவறு போல! ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மூடப்பட்டால் அதன் தொழிலாளர் நலன் கருதி வழக்குத்தொடுக்கும் சங்கங்கள், […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒரு மாதிரியான உலகமிது!

ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகம்..நல்லவர்களும் இருக்கிறார்கள்.சுழன்றால் என்ன நின்றால் என்ன? நல்லவர்கள் பாதிக்கப்படுவார்களே? எனது கண்முன்னே நடந்த அநியாயம். பழையது என்றாலும் நினைவிலிருந்து நீங்காத ஒன்று. ஒரு சுமாரான அளவிலான காய்கறி கடையில், கல்லாவில் இருந்தது ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்…அவரிடம் வந்து ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை ஆசாமி, ஏதோ ஒரு பொருளை வாங்கிவிட்டு 2000 ரூ தாளை நீட்டினார்.. என்னப்பா இது 60 ரூ பொருளை வாங்கிட்டு 2000 தாளை தருகிறாயே என்று அந்த […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சேட்டுகளுக்குக் கொண்டாட்டம்?

கையிலிருக்கே தங்கம் கவலை ஏன்டா சிங்கம் ? இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்போம். ஏழை, நடுத்தர, மற்றும் மேல்தட்டு நடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே பெரும்பாலும் தங்கமாகத்தான் இருக்கும். இந்த வகையறாவில் யாரும், ஷேர்களையோ, பாண்டு பத்திரங்களையோ, வங்கியில் பெரிய தொகையையோ சேமிப்பாக வைத்துக் கொள்வதை விட, வீட்டில் இருக்கும் பெண்களின் பெயரைச் சொல்லி, உனக்குன்னு இவ்வளவு நகை, நாளைக்குப் பிள்ளைய கல்யாணம் பண்ணிக் கொடுக்க இவ்வளவு நகை என்று பார்த்துப் பார்த்து தங்க நகைகளைத் தான் […]

Categories
இலக்கியம் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மதுரை குஞ்சரத்தம்மாள்

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா? தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம் –1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது – கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது – பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது – அதில் நாம் அவசியம் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

காற்றில் பறந்த ஆணையரின் ஆணை

காவல் துணையர் ஆணையர் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் கொடுத்த பேட்டி எல்லாம் சும்மா , மக்களிடம் ஒரு நல்ல எண்ணத்தை மேம்போக்காக உருவாக்குவதற்குத் தான் போல. அந்த அறிக்கை என்று பிறப்பிக்கப்பட்டதோ, அப்போதே காற்றிலும் பறந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது. பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டும் விதமாக இந்தப்பக்கம் நல்ல விதமாக அறிக்கையை விட்டு , அந்தப்பக்கம், போக்குவரத்து காவல் அதிகாரிகளை வசூல் வேட்டைக்குத் துரத்தி விட்டார்கள் போல. இன்று எங்கள் பகுதி சந்திப்பில் […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வறுமை தந்த அனுபவம்.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலான குழந்தைகள் வறுமை என்பதை உணரும் விதமாக வளர்வதில்லை. இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது பெரும்பான்மை மட்டுமே. 100 சதவீதம் அல்ல. இன்றைய நாளில் பொதுவாகவே ஒரு 3-4 வயது குழந்தை செல்போனை முழுமையாக இயக்கும் அளவிற்கு திறன் பெற்ற குழந்தைகளாகவும், பெரும்பாலான வீடுகளில் செல்லும் என்பது அத்தியாவசியம் போலவும் ஆகிப் போனது. எங்களது, அதாவது 90 களில், வீடுகளில் தொலைக்காட்சி என்பதே அரிது. தொலைக்காட்சியைக் கூடப்பக்கத்து வீடுகளில் சென்று தான் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் […]