Categories
தொடர்கதை

அப்பா – தொடர்கதை- இறுதி பாகம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அங்கே கவனிக்க இயலாத காரணத்தால் மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ல் ஏற்றி வைத்திருந்தார்கள். எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு பையன் தெளிவாக இருப்பதாகவும், இன்னொருவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்கள். எவன் தெளிவாக இருக்கிறான்? எவன் ஆபத்தான சூழலில் இருக்கிறான் என்பதே தெரியவில்லை.இன்னொரு விஷயம், அந்த இன்னொரு பையன் யார் என்பதே எனக்குத்தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டல்லவா இருந்தான்? திடீரென ஆம்புலன்ஸ் உள்ளிருந்து […]

Categories
தொடர்கதை

அப்பா  தொடர்கதை – பாகம் 5

ஐசியூவில் அவன் என்னைப் பார்க்க மறுநாள் காலையில் வந்ததும் நான் சைகையில் அவனிடம் கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டியா என்பதே! அவனையும் அவன் அண்ணனையும் (பெரியப்பா பையன்) போய் சாப்பிட்டு வரும்படி சைகையில் சொல்லி அனுப்பினேன். வாய் பேச்சானாலும் சைகை ஆனாலும் பாசம் பாசம் தானே? எனக்கு படுத்த படுக்கையானது வருத்தமல்ல. ஆனால் இவன் பனிரெண்டு முடித்து கல்லூரி சேர, காந்திமதிக்கு மாப்பிள்ளை கிடைத்து கல்யாண ஏற்பாடுகள் நிகழும் தருணத்தில் படுத்து விட்டோம் என்ற வருத்தம் தான். […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம் 4

கடைத்தெருவிற்கு சென்று வண்டிக்கடையில் அவனுக்கு பிடித்த பாதுஷாவை வாங்கி கொடுத்து, முருகன் கோவிலில் சென்று அவன் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வீடு திரும்பினோம். மூன்று வேளைக்கு மூன்று விதமான உணவுப்பழக்கம் எல்லாம் அப்போது இல்லை.மதியம் செய்யும் சாப்பாடு தான் இரவுக்கும்.மதியம் காய்கறியுடன் சாப்பாடு. இரவு வேளைகளில் சேவு, மிக்சர், பக்கோடா போன்ற பண்டங்களை சேர்த்து சாப்பாடு. இன்றைய காலகட்டம் போல, அப்போது சுகர் பெரும்பாலானோர்க்கு இல்லை. அதனால் இரவு சாப்பாடு சாப்பிட தடை இல்லை. […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம் 3

ஆமாம் நான் அப்பா ஆகிவிட்டேன். சரியாக நான்கு வார்த்தைகளில் சொல்லிவிட்டேன்.ஆனால் எத்தனை ஆயிரம் வார்த்தைகள் கோர்த்து, கண்ணதாசன் போல எத்தனை கவிஞர்களை வைத்து கவிபாடச் செய்தாலும் என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. என் வாழ்நாள் மொத்தத்தையும் இந்த ஒரு நொடியுடன் ஒப்பிட்டால், எனக்கு இந்த ஒரு நொடியே பெரியது.எனக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் இந்த பூமியின் சுழற்சியை இத்தோடு நிறுத்தியிருப்பேன். இந்த நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.செப்டம்பர் 27, 1982. தமிழில் வெறும் 247 […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை பாகம்-2

பயணம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. விந்தணுக்கள் அண்டத்தை அடையும் முதல் பயணம் ஒரு மனித வாழ்வை உருவாக்கி வைக்கிறது.அது துவங்கி, நாலு கால், இரண்டு கால், மூன்று கால், இறுதியில் எட்டு காலில் செல்லும் ராஜ பயணத்தில் வாழ்க்கை முடிகிறது. அப்படி எட்டு கால் பயணம் போகும் வரைக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பயணம் என்பது இன்றியமையாதது தானே? எங்கள் காலத்தில் பயணம் கிடைக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பெரும்பாலும் நாங்கள் சென்றது […]

Categories
தொடர்கதை

அப்பா- தொடர்கதை- பகுதி 1

உன் உயிர்த்துளியில் ஒரு துளி தானே நான்?எனக்கு உயிர் கொடுத்த என் தந்தையே! உனக்காக நான் எழுதும் கதை. அப்பா! அப்பாவாகிய நான் என் அனுபவத்தை பகிரும் கதை! அப்பாவாகும் முன்பு வரை, என்னைப் பொறுத்த வரை அப்பா என்பது வெறும் வார்த்தையாகத்தான் உணரப்பட்டது.ஆனால் நான் அப்பா ஆன பின்பு, அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, அப்பா என்பது ஒரு தலைமுறைக்கான அடையாளம்,அப்பா என்பது அன்பின் வெளிப்பாடு,அப்பா என்பது தூய்மை,அப்பாவிலும் உள்ளது தாய்மை என்று உணரப்பட்டது. […]