சர்க்கஸ் என்றாலே நம்மில் பெரும்பாலானோர்க்கு ஜெமினி சர்க்கஸ் தான் ஞாபகத்திற்கு வரும். சிங்கம் புலி யானை கரடி எல்லாம் வைத்து, மிகப் பெரிய அளவில் பிராம்மாண்டமாக நிகழும் சர்க்கஸ் அது. நகராட்சி, மாநகராட்சிகளில் அது போன்ற சர்க்கஸ் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சிற்றூர்களில், கிராமங்களில், சிறிய அளவிலான சர்க்கஸ்கள் நிகழும். புதன், வியாழக்கிழமைகளில் துவங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிடும். கூட்டம் இருந்தால் ஓரிரு நாட்கள் தொடரும். ஊரில் உள்ள சின்ன சின்ன பொட்டல்களில் கூடாரம் அமைத்து, மரப்பலகையிலான […]
