மாதா, பிதா, குரு, தெய்வம். ஒரு மனிதனுக்கு தெய்வம் துணை நிற்காவிட்டாலும், மாதா, பிதா மற்றும் குரு ஆகியோர் ஒருபோதும் கைவிடுவதில்லை. சொல்லப்போனால் பலரது வாழ்வில் பல நேரங்களில் இந்த மூவரும் தான் தெய்வமாக நின்று வாழ்வைச் சிறப்பிப்பவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பின் போது போதித்த ஆசிரியர்கள் அனைவரும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் தான். அதிலும் பாடம் மட்டும் நடத்தாமல் சற்றுக் கூடுதலாக மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நெருங்கிப் […]
Tag: நினைவுகள்
சர்க்கஸ் என்றாலே நம்மில் பெரும்பாலானோர்க்கு ஜெமினி சர்க்கஸ் தான் ஞாபகத்திற்கு வரும். சிங்கம் புலி யானை கரடி எல்லாம் வைத்து, மிகப் பெரிய அளவில் பிராம்மாண்டமாக நிகழும் சர்க்கஸ் அது. நகராட்சி, மாநகராட்சிகளில் அது போன்ற சர்க்கஸ் காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சிற்றூர்களில், கிராமங்களில், சிறிய அளவிலான சர்க்கஸ்கள் நிகழும். புதன், வியாழக்கிழமைகளில் துவங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிடும். கூட்டம் இருந்தால் ஓரிரு நாட்கள் தொடரும். ஊரில் உள்ள சின்ன சின்ன பொட்டல்களில் கூடாரம் அமைத்து, மரப்பலகையிலான […]
வழக்கொழிந்த ஒழுக்கம்!
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது. 90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடிதான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள். வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும். […]
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது. அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது. சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் […]
The kiss of life.
1967 ம், ஆண்டு எடுக்கப் பட்ட “The Kiss of Life.” என பெயரிடப் பட்ட புகைப்படமே இது, ராண்டல் மற்றும் தொம்சன் ஆகிய இருவரும், வழமையான எலேக்ரிசிட்டி பவர் கேபிள் மீது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீர் என, ராண்டல் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு அடுத்த வினாடியே, அந்த வயர்களில் சிக்குண்டு நினைவிழந்து போகிறார். அவர் கீழே, விழாமல் தாங்கிப் பிடித்த தொம்சன், செயற்கை சுவாசம் கொடுக்கும் போது எடுக்கப் பட்ட படமே இது […]
காவல்துறை யார் நண்பன்?
நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான். காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி. விடை தெரியாத கேள்வி. காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல. காவல்துறையில் பணிபுரியும் […]
சில விஷயங்களை நாம் மிக யதார்த்தமாகப் பழகிக் கொண்டோம்.கள்ளு இறக்கத் தடை இருக்கும் இதே மாநிலத்தில் கொக்கைன் மிக எளிதாக வெகு காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதுவும் மிகப் பிரபலமான மனிதர்களிடையே அது சர்வ சாதாரணமாகக் கைமாறியிருக்கிறது. நாம் இதுநாள் வரை கள்ளு இறக்க ஏன் தடை? அதுவும் ஒரு தொழில் தானே?பனை மரங்களின் எண்ணிக்கை கூடும், அதைச் சார்ந்த தொழில்கள் பெருகும் என்று கேள்வி கேட்டதுமில்லை. கொக்கைன் போதையில் சினிமா பிரபலங்கள் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையவுமில்லை […]
பிரதி எடுக்க முடியாத அசல்.அவரைப்போல ஆயிரம் பேர் அறிவுரை கூறலாம்.. அவரைப்போல அக்கறை காட்ட கூட ஆள் வரலாம்.. அவரது அன்பு போலவே சிலர் அன்பு காட்டலாம்.. ஆனாலும் அவர் அவர்தானே? என்றுமே நகல் எடுக்க இயலாத அசல்.. ஆயிரம் ஆயிரம் கவிஞர்கள் புகழ்பாடினாலும், பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்டு கவிதை நூலாக கோர்த்தாலும் அவரின் பெருமையை ஈடு செய்ய இயலுமோ? இவர்தான் அவர்,நமக்காப அவர் செய்தது இதுதான் என யாராவது விளக்கிட இயலுமோ? இவர் இல்லாதிருந்தால் நம் […]
பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை […]
If u want to be a role model, be a father or a teacher..அனுபவித்த வாசகம்… மழைக்கால மாலை பொழுதுகள் கொடுத்த அறிவும், அனுபவமும் ஏராளம்.. மழைக்கால மாலை நேரத்தில் மட்டுமே அப்பா வீட்டில் இருப்பது வழக்கம்.. வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே வீட்டில் இருப்பார். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேலையை செய்ய மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருப்பார், நாங்கள் சுகமாக வாழ்வதற்காக. இப்போது போல அப்போதெல்லாம் பெரிதாக செலவெல்லாம் செய்ததில்லை.. வீட்டு […]