Categories
நினைவுகள்

மாடி பஸ்- கம்பீரமான இரட்டை அடுக்குப் பேருந்தின் நினைவுகள்

மாடி பஸ். உண்மையிலேயே அந்த வகைப் பேருந்தின் பெயர் இதுதானா என்பது தெரியாது. ஆனால் மாடி பஸ் என்று சொன்னாலே எல்லாருக்கும் கண்டிப்பாகப் புரிந்து விடும். ஆமாம் டபுள் டக்கர் பஸ் என்று ஆங்கிலத்திலும், மாடி பஸ் என்று தமிழிலும் வழக்காடலாக இருந்தது அந்த வகைப் பேருந்து.இதில் பஸ் என்பது தமிழ் வார்த்தை என்றே பலரும் நம்பியிருந்ததும் உண்மை. இதன் உண்மையான தமிழாக்கம் இரட்டை அடுக்குப் பேருந்து என்பதாகும். ஆனால் அதைச் சொன்னால் பலருக்கும் விளங்காது. சரி […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அலட்சியத்தின் விளைவு

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பழுதடைந்த நிர்வாகமும், பலியான உயிர்களும்.

சமீபத்தில் நாம் அனைவரும் கேள்விப்பட்டு, சிலர் வருத்தமும், சிலர் கேலிக்கூத்தும் செய்த செய்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப், வழிகாட்டுதலின் பேரில், மகிழுந்தில் சென்ற மூவர், பாலத்திலிருந்து, மிகிழுந்து கவிழ்ந்து விழுந்து பலி. இதில் மூன்று உயிர் போய்விட்டதே எனப்பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இந்த செய்தி வெளியான இணையப்பக்கத்தில் சிரித்தும் வைத்திருக்கிறார்கள்.மூன்று உயிர் பலியானதைத் தாண்டி எதை எண்ணி சிரிக்கத் தோன்றியதோ தெரியவில்லை. வேறு சிலர் இது அந்த மாநிலத்தின் அரசியல் கட்சியின் நிர்வாகத்திறமை சரியால்லாத காரணத்தால் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நடத்தைமீறல்.

நான் எனது தாயார் மற்றும் உறவினரோடு, சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டிக்கு TN 67 N 1189 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் 16 நவம்பர், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, 5.45 மணிக்கு வந்தடைந்தவாறு பயணித்தேன். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நாங்கள் நிற்கும் போதே நல்ல மழை. சரியாக 4.15 மணிக்கு நாங்கள் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து எப்போது கிளம்பும் என கேட்டதற்கு 5 மணி ஆகும் என ஆட்களைப் புறக்கணிக்கும் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பண்டிகை நெரிசலால் கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம். பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான். ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

சாலையோர காதல் கதை

ஒரு சிறிய உருவகப்படுத்தப்பட்ட கற்பனை காதல் கதை. திவ்யா – அழகி, யாருக்கும் பார்த்த உடனேயே பிடித்துவிடும் அவளை. பாலாஜி- கொஞ்சம் பழமைவாதி, 90 ஸ் ஸ்டைலிலானவன். இன்னும் கூட அவனைப்பார்த்தால் 90 ஸ் பீலிங் ஒட்டிக்கொள்ளும். எங்கள் ஏரியாவின் முதல் முக்கிய சாலை வழியாக வந்து இரண்டாவது முக்கிய சாலையை கடந்து, எங்கோ சென்று மறைந்து மீண்டும் வந்த வழியே செல்வது திவ்யாவின் அன்றாட வழக்கம்.திவ்யா வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவளிடம் அப்படி ஒரு […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

வாகன புக்கிங் முரண்பாடுகள்

ஒரு உணவகத்துக்கு செல்கிறோம், அங்கே ஒரு தோசை 90 ரூ என பட்டியலில் இருக்கிறது. உங்களிடம் வரும் சர்வரிடம் ஒரு தோசை என்று நீங்கள் கோருகிறீர்கள். உடனே அவர், தோசை 140 ரூ என்று கூறுகிறார். ஏம்ப்பா பட்டியல் ல 90 ரூ தானே போட்டுருக்கு? நீ என்னவோ 140 ரூ சொல்ற? என்று கேட்டால்,  எங்க முதலாளி எங்களுக்கு சம்பளமாக சொற்ப பணம் தான் தருகிறார். நீங்கள் 140 ரூ தருவது என்றால் சாப்பிடுங்கள், இல்லாவிட்டால் […]