நல்ல படங்களில் லாஜிக் பார்க்கத் தோன்றுவதில்லை.கதை போகும் போக்கில் நாமும் இனிமையாகப் பயணிக்கலாம் என்று தான் தோன்றும். அதுபோல ஒரு இனிய பயணம் சொல்லும் கதை. ஒரு மறதி வியாதி உள்ள நடுத்தரம் தாண்டிய வயது உள்ள நபர், தன் வீட்டிற்குத் திருட வந்த திருடரிடம் உதவி கேட்டு அவருடனே பயணிக்கும் கதை. கதையின் ஒரு நாயகனான பகத் பாசில் ஒரு திருடன்.நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வீட்டில் திருட உள்ளே நுழைகிறார். அங்கே கதையின் இன்னொரு நாயகனான […]
மாரீசன்- திரை விமர்சனம்
