Categories
தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

அருமையான வெற்றி!

நாம் இலங்கை அணியுடனான ஆட்டத்திற்குப் பிறகு எழுதியிருந்த்தைப் போலவே இன்று இந்திய அணியின் ஆட்டக்காரர்களின் தடுமாற்றம் நம்மை கடைசி ஓவர் வரை திகிலிலேயே வைத்திருந்தது. எளிமையாக அடைய வேண்டிய இலக்கு ஒரு கட்டத்தில் கடினமான சந்தேகத்திற்குரியதாக மாறி பிறகு ஒரு வழியாக திலக் வர்மாவின் திறமையான ஆட்டத்தினால் அடைய நேர்ந்தது . நாம் குறிப்பிட்டிருந்தது போலவே சூர்யகுமார் யாதவ் அவர்களால் ரன் சேகரிப்பில் எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் வழக்கம் போல […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

ஆணவத்திற்கு அடிக்கப்பட்ட ஆணி!

ஆணவத்திற்கு அடிக்கப்பட்ட ஆணி நேற்றைய இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டி. நடந்து வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இதுவரை இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் தோற்கவில்லை என்ற பெருமையுடன் வீறு நடை போடுகிறது. வரப்போகும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் பாகிஸ்தானி அணிக்கு எதிரான போட்டியையும் வெற்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என்பநில் ஐயமில்லை. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது.இப்போதைய இந்திய அணி என்பது வீழ்த்தப்படவே முடியாத ஜாம்பவான் கிடையாது.நாம் செய்யும் ஓரிரு […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

இது பண்புமல்ல, நமது பண்பாடுமல்ல!

நடந்து முடிந்தது இந்தியா – பாகிஸ்தான் போர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் வீசிய குண்டு மழையில் பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தும் உயிரிழந்தும் வீடு திரும்பினார்கள்.அவர்களால் நீண்ட நெடு நேரம் முறையாக சண்டையிட முடியாத காரணத்தால் அவர்கள் நினைத்த இலக்கை அடைய இயலவில்லை. பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வீசிய குண்டுமழையை அசால்ட்டாக கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வந்து குண்டுகள் சிலவற்றை அவர்கள் பக்கமே திருப்பி எறிந்தும், வடிவேலு பாணியில் இது வெடிகுண்டு அல்ல, வெறும்குண்டு என […]

Categories
விளையாட்டு

மட்டமான மட்டையாட்டமும், மண்ணாங்கட்டி வியூகங்களும் – சிஎஸ்கே சோதனை காலம்

இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா? இதென்ன கேள்வி? கண்டிப்பா வாய்ப்பு குறைவு தான். ஆமாம் சிங்கம் போல கர்ஜித்த இதே அணி இன்று பூனைகளைப் போல பம்மிக் கொண்டிருக்கிறது. பாய்ந்தால் நல்லது தான். ஆனால் பாய்வதற்கான சூழல் தான் எப்போது அமையும் என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய பதிவில் (நீ ஆடு தல) பேசியிருந்த படி ஒருவரின் தோள் மீது அணியை நிற்க வைக்க நினைப்பது தவறு. முதல் […]

Categories
விளையாட்டு

நீ ஆடு தல!

என்னதான் அச்சு இந்த சிஎஸ்கே வுக்கும் தோனிக்கும்? என்று பலரும் கதறிக்கொண்டிருக்க, தோனி வன்மக்குழு சந்தடியில், தோனி மட்டும் இல்லாவிட்டால் சிஎஸ்கே மீண்டும் சிங்கமாக கர்ஜிக்கும் என்று வசைபாடத்துவங்கி இருக்கிறார்கள். மேலும் தோனியே அணியைப் பின்னுக்கு இழுப்பதாகவும், கிரிக்கெட் என்ற கலாச்சாரமே மாறி வருவதாகவும் சொல்லி தோனியை அணியிலிருந்து விலகுமாறு வன்மத்தைக் கக்கி வருகிறார்கள். இதில் ஒரு உண்மை கட்டாயம் பொதிந்திருக்கிறது. கிரிக்கெட் என்ற விளையாட்டுக் கலாச்சாரத்தைத் தாண்டி தோனி வந்து ஒரு சிக்ஸ் அடித்தால் போதும் […]

Categories
கருத்து விளையாட்டு

ஓடி விளையாடி மகிழட்டுமே!

பளிச்சிடும் கோடை காலம்.கிட்டத்தட்ட பள்ளிகளில் தேர்வு துவங்கி விட்டது.. விடுமுறையை நோக்கிய ஆர்வத்தில் மாணவர்கள்.. அய்யய்யோ லீவுல என்னன்ன அழிச்சாட்டியம் பண்ணக் காத்துருக்காய்ங்களோன்னு பீதியில் பெற்றோர்கள்.. அடிக்கிற வெயிலில் வெளிய போயி விளையாடாம இருக்க videogames, dvd player, play station, Android mobile games ன்னு பயங்கரமா யோசிச்சு காசு சேத்துட்டு இருக்கீங்களா? இல்ல வாங்கிட்டீங்களா? அப்படி எதாவது வாங்கியிருந்தா அத திருப்பி அனுப்புங்க மொதல்ல… அந்த காசுல நல்ல பருத்தி ஆடை 4 set…வாங்கிடுங்க […]

Categories
விளையாட்டு

ஈசாலா கப் நம்தா?

தொடங்கிவிட்டது இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழா. இனி நாள்தோறும் ஒரு மாதத்திற்கு மாலை வேளை, வீடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசை மாற்றுதல் தொடர்பான சண்டைகள் நிகழும். முன்புபோல இல்லை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு ஒரு மொபைல்போன் வைத்துக்கொண்டு அதிலேயே அவரவர் விருப்பத்திற்கு பார்த்துக் கொள்கிறார்கள். ஐபிஎல் ன் அனைவரின் செல்லப் பிள்ளைகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் வெற்றியைப் பதித்துப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கண்ணன் தேவன் டீ குடி, சி எஸ் கே புடி புடி […]

Categories
நினைவுகள்

கிடைக்குமா ரிவர்ஸ் பட்டன் – நீங்கா நினைவுகள்

சொந்த ஊர் எப்போதும் சொர்க்கம் தான்.ஆனால் சில யதார்த்தம் கசக்கிறது. மருந்து போலத்தான் என்றாலும் கசப்பு கசப்பு தான். ஓடி, ஆடி புழுதியில் உருண்ட அதே தெருக்கள்… புழுதி இல்லை இப்போது, சிமெண்ட் சாலைகள். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் ஏதோ ஒரு வசதியான வீட்டுத் திண்ணையில் தெருவிலுள்ள மொத்த கும்பலும் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்போம். மின்சாரம் வந்து தெரு விளக்குகள் ஒளிர்ந்ததும் ஊரைப் பிளக்கும் கூப்பாடு போடுவோம். கரண்டு வந்திருச்சே, கரண்டு வந்திருச்சே என்று […]

Categories
விளையாட்டு

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் பிடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..ஆத்மார்த்தமாக இல்லாவிட்டாலும், எல்லாரும் பார்ப்பதால் நானும் பார்ப்பேன் என்றும் கூட இன்று பலரும் கிரிக்கெட் ரசிகிர்களாகி விட்டனர். மேலும் பல வகையான பொது ஜனத்தை இருக்கும் வகையில் இன்று கலர்கலரான கிரிக்கெட்டுகளும் வந்து கலைகட்டுகின்றன. எத்தனை பாஸ்ட்புட் வகை கிரிக்கெட் கள் வந்தாலும் , இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனென்றால் 90 களின் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

குதூகலச் சென்னை- பீச் கிரிக்கெட் ஒளிபரப்பு அனுபவம்

சென்னை, என்று சொன்னாலே நம் மக்களிடமிருந்து இரண்டு விதமான எதிர்வினைகள் வரும். என்னப்பா எதுக்கெடுத்தாலும் சென்னை சென்னைனு. மத்த ஊர்ல இருக்கவம்லாம் மனுஷன் இல்லையானு, சென்னைக்கு சம்பந்தமில்லாத சென்னையின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ளும் சிலர் பேசுவதுண்டு. இவர்களாவது பரவாயில்லை. இன்னும் ஒரு சிலர் உண்டு, இங்கேயே வந்து வாழ்ந்து அனுபவித்து சம்பாதித்து விட்டு, இந்த ஊரையே, ஊரா இது? என்று கூறும் நன்றி கெட்ட ரகம். நம்ம சென்னை இதுக்கெல்லாம் கவலைப்படாமல் எத்தனை பேர் வந்தாலும் […]