ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.
பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.
எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.
தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.
“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,
பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்
வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!
“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

(இணையத்தில் பதிப்பிறக்கியது)
“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”
“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”
“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”
“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!
தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.
- பத்தாயிரம் பத்தாதேடா?வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா , கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா! அப்படின்னு ஒரு பாடல் உண்டு. வரவை மீறிய செலவு நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நகைச்சுவையாக சொன்ன பாடல் அது. வரவை மீறிய குறைந்தபட்ச செலவுக்கே இந்த கதி என்றால், கணக்கில்லாமல் செய்யப்படும் செலவும், திட்டமிடாமல் இயங்கும் நிர்வாகமும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் என்ற ரீதியிலான மகளிர் உரமைத் தொகையே இங்கு பலராலும் பலவிதத்திலும் விமர்சிக்கப்படும் நிலையில்,… Read more: பத்தாயிரம் பத்தாதேடா?
- விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பலே ஜாம்பவான், மிகப்பெரிய பலசாலி என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியது இன்று சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்து தொடரின் போது நியூசிலாந்து அணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தே தொடரைத் தோற்றது.ஆனாலும் இந்திய அணியை மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள். அதை இந்திய அணி இந்த உலகப்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அணியுடன் நிரூபிக்கவில்லை. லீக் ஆட்டங்களில் அமெரிக்க அணியுடனான போட்டியில் சற்று கதி கலங்கியே திரும்ப… Read more: விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!
- மங்களம்- நித்ய சுப மங்களம்!மங்களம் மங்களம் நித்ய சுப மங்களம் மங்களம் என்றொரு பாடல் உண்டு. மார்கழி மாத பஜனையின் போது கார்த்திகை மாத சோமாவார பஜனை துவங்கி, மார்கழி முழுக்க விடியற்காலை பஜனை பாடி, தை 1 ஆம் தேதி அதையும் முடித்து, பிறகு அந்த பஜனை காலத்தல் வசூலான பணத்தில் பிரசாதம் தயாரித்து படையலிட்டு பஜனை பாடி பொதுமக்கள் அனைவருக்கும் பரிமாறி கணக்கு முடிக்கும் ஒரு நாள்.அந்நாளில் இறுதிப் பாடலாக இந்த மங்களம் என்ற பாடலைப் பாடுவோம். நாம் அடிக்கடி விளையாட்டாகக் கூடிய முடிவுரை என்பதை… Read more: மங்களம்- நித்ய சுப மங்களம்!
- விசில்- வெற்றியின் ஆயுதம்?விசில். உலகத்திலேயே உன்னதமானது விசில். ஆரவாரத்தில் அடிப்பது விசில். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விசில். யாரையாவது கூப்பிடுவதற்கு அடிப்பது விசில். உடற்கல்வி ஆசிரியர் அடிப்பது விசில். வாட்ச்மேன் அடிப்பது விசில்.யாராவது வழிதவற நடந்தால் அவர்களை வழிநடத்த காவல்துறையினர் அடிப்பது விசில். தமிழனின் பாரம்பரியம் விசில். இரண்டாம் நூற்றாண்டிலேயே விசில் புழக்கத்தில் இருந்துள்ளது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியது விசில். கம்பரும் கூட கம்ப இராமாயணத்தில் விசிலின் பெருமை பற்றி பேசியிருக்கிறார். முதலில் தூது சென்ற அனுமன் சீதையிடம் சீதாப்பிராட்டி, நான் அடிக்கிறேன் சீட்டி… Read more: விசில்- வெற்றியின் ஆயுதம்?
- தமிழ்நாட்டின் பெருமிதம்.குடிமைப் பொறுப்புகளை சரியாகச் செய்வதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். குடிமைப் பொறுப்புகள் என்பது என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் சமூகத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்காகவும் தாமாக முன்வந்து செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். சட்டம் மற்றும் விதிகளை மதித்தல், வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களித்தல், பொது சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவை இதில் முக்கியமானவை இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்களை நிரூபித்துக் கொண்டிருப்பது நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் பெருமையை நிலைநாட்டுகிறது.… Read more: தமிழ்நாட்டின் பெருமிதம்.
- இளம் தலைமுறையின் சீரழிவைத் தடுக்க!90 களில் பிறந்த குழந்தைகள், 90 களில் குழந்தைப் பருவத்தைக் கடந்தவர்கள் தனது 13 வயதில் , அதாவது 8 ஆவது வகுப்புப் பயின்ற காலத்தில் அதிகபட்சம் செய்த சேட்டைகள் , டியூஷனுக்குத் தாமதமாக வருவது, பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வருவது, பெஞ்சில் தாளமிடுவது என இவ்வளவு தான்.கொஞ்சம் பருவமடைந்து விவரமடைந்த சிலர், தன் வயதை ஒட்டிய பருவமடைந்த பிள்ளைகளை ஓரக்கண்களால் பார்ப்பது உண்டு. இவ்வளவு தான் 90 களின் கால கட்ட குழந்தைகளின் வாழ்க்கை முறை. பாக்கெட்டில் சீப்பு வைத்திருந்தால் கூட அடி விழும்.அப்படியிருந்தது… Read more: இளம் தலைமுறையின் சீரழிவைத் தடுக்க!




