ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.
பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.
எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.
தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.
“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,
பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்
வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!
“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

(இணையத்தில் பதிப்பிறக்கியது)
“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”
“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”
“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”
“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!
தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.
- எட்டு வயதுக் குழந்தைக்கு இது தேவைதானா?சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பகிரப்பட்ட அந்தஎட்டு வயதுக் குழந்தை பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட விவகாரத்தில் சில கேள்விகள். தலைமை ஆசிரியரிடம்: ஐயா வணக்கம்.தாங்கள் அந்தக் குழந்தை சமூக ஊடகங்களில் காலம் கழிக்கிறது, சரியாகப் படிக்கவில்லை என்று காரணம் சொல்லி அந்தக் குழந்தையைப் பள்ளியை விட்டு அனுப்பியதாகச் சொன்னீர்களே! இது எந்த விதியின் அடிப்படையில் செய்யப்பட்டது?எட்டு வயதுக் குழந்தை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், பள்ளியிலிருந்து அனுப்பலாம் என்று ஏதேனும் நடைமுறை உள்ளதா? மேலும் அந்தக் குழந்தையைப் பார்த்து மற்ற குழந்தைகள் கெட்டுப் போகும் என்று சொல்கிறீர்களே,… Read more: எட்டு வயதுக் குழந்தைக்கு இது தேவைதானா?
- PMVBRY- EPFO- ஒரு தகவல்PMVBRY- அதாவது EPFO ( Employees provident fund organisation ) ல் முதல்முறையாக இணையும் ஊழியர்களுக்கு ( இது அமைப்பு சாரா ஊழியர்களா? என்பதில் தெளிவில்லை) 15000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை வந்தது. அதன்படி பலருக்கும் முதல் தவணையாக பாதி பணம் ரூ.7500 வரவு வைக்கப்பட்டது. மீதி 7500 ரூபாயைப் பெற அந்த ஊழியர்கள், EPFO இணையதளத்தில் கொடுக்கப்படுள்ள , FLC அதாவது Financial Literacy Course ஐ முடித்து சான்றிதழ் பெற… Read more: PMVBRY- EPFO- ஒரு தகவல்
- இப்படியும் சிலர்!உலகத்தைக் கண்டு எத்தனையோ முறை நாம் சலித்துக் கொள்கிறோம். நமது அன்றாட வாழ்வில் பல முறை பலருடனும் முறைத்துக் கொள்வதோ, திட்டுவதோ, சாபமிடுவதோ என நமது அனுபவங்கள் பல கசப்பாகவே இருக்கின்றன. ஆனாலும் அதையும் தாண்டி,நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டுஎல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற குறளுக்கு ஏற்ப, நாம் பல நல்லவர்களையும் அவ்வப்போது பார்க்கத் தான் செய்கிறோம். நல்லவர்கள் என்பது கேப்டன் விஜயகாந்த் போல பலருக்கு அன்னமிட்டு தலைவனாக வாழ்வது மட்டுமல்ல. நமது தினசரி பணத்தேடலில் , ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் அன்றாடம் மற்றவர்களுக்கு நம்மால்… Read more: இப்படியும் சிலர்!
- அதே கடை, அதே டெய்லர் அதே வாடகை!ஒரு ஊரில் ஒரு சமையல்காரர் இருந்தார். அவர் விதவிதமாக சமையல் செய்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினார். அவரின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தது. அதில் சில விமர்சனங்களும் வளர்ந்தன. அந்த சமையல்காரர் ஏமாற்றுகிறார்.அவர் சமையலுக்கு வாங்கும் பொருட்களில் பலவற்றை முழுதாக உபயோகிக்காமல் கடையில் திருப்பிக் கொடுத்து அதிலும் பணம் சம்பாதிக்கிறார் என்று இன்னொரு சமையல்காரர் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார். சரிப்பா அவரு நல்லா பிரியாணி செய்வாரு, நீ வந்தா என்ன செய்வ? வித்தியாசமா ஏதாவது செய்வியா என்று வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு, நானும் பிராயாணி செய்வேன்… Read more: அதே கடை, அதே டெய்லர் அதே வாடகை!
- பத்தாயிரம் பத்தாதேடா?வரவு எட்டனா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா , கடைசியில் குந்தனா குந்தனா குந்தனா! அப்படின்னு ஒரு பாடல் உண்டு. வரவை மீறிய செலவு நம்மை துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நகைச்சுவையாக சொன்ன பாடல் அது. வரவை மீறிய குறைந்தபட்ச செலவுக்கே இந்த கதி என்றால், கணக்கில்லாமல் செய்யப்படும் செலவும், திட்டமிடாமல் இயங்கும் நிர்வாகமும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் என்ற ரீதியிலான மகளிர் உரமைத் தொகையே இங்கு பலராலும் பலவிதத்திலும் விமர்சிக்கப்படும் நிலையில்,… Read more: பத்தாயிரம் பத்தாதேடா?
- விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!நடக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி பலே ஜாம்பவான், மிகப்பெரிய பலசாலி என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியது இன்று சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்து தொடரின் போது நியூசிலாந்து அணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தே தொடரைத் தோற்றது.ஆனாலும் இந்திய அணியை மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்த்தார்கள். அதை இந்திய அணி இந்த உலகப்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியைத் தவிர்த்து மற்ற அணியுடன் நிரூபிக்கவில்லை. லீக் ஆட்டங்களில் அமெரிக்க அணியுடனான போட்டியில் சற்று கதி கலங்கியே திரும்ப… Read more: விவேகமற்ற அணியும், வெளக்கமாறு வர்ணனையும்!



