ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.
பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.
எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.
தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.
“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,
பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்
வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!
“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

(இணையத்தில் பதிப்பிறக்கியது)
“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”
“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”
“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”
“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!
தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.
- ஆண் பாவம் பொல்லாதது – விமர்சனம்அம்பேத்கர் பிறந்த இடம் தான் போர்பந்தர் என்று மனைவி சொன்னாலும் அதுதவறு என்று சொல்லக்கூட தைரியம் இல்லாத ஆண் வர்க்கம். ஒருவேளை அது தவறு என்று சொன்னால் அவன் ஆண் திமிர் பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் கூட பட்டம் கட்டப்படுவான் என்ற பரிதாபமான செய்தியைப் படமாகத் தந்தது தான் இந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம். இரண்டு வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தாலும் கூட, நல்ல படம் என்ற பெயரெடுத்து இன்றளவிலும் கூட ஓரளவிற்கு நியாயமான கூட்டத்தோடு திரையரங்குகள் இருப்பது இதன் வெற்றியை பரைசாற்றுகிறது.… Read more: ஆண் பாவம் பொல்லாதது – விமர்சனம்
- புரூஸ்லி இறப்பின் மருத்துவ விளக்கம்.படித்துப் பகிர்வது! புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாகஅதிக குளிர்பானம் / பீர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள் என்று போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது.இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி வாருங்கள் புரூஸ்லீயின் மரணம் வழி பாடம் கற்போம் டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை ஹாங்காங் நகரில் 20.7.1973 அன்றுஹாலிவுட் அதிரடி மன்னன் புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தார் அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும்பயிற்சி செய்யும் போது தலை சுவரில் மோதி அதனால்… Read more: புரூஸ்லி இறப்பின் மருத்துவ விளக்கம்.
- தடம் மாறும் இளைஞர்கள்!சமீப காலமாக இளைஞர்களின் போக்கு மிக மோசமாக மாறி இருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது. சமீபத்திய சில செய்திகளின் மூலமாக இதை அறிந்திர முடிகிறது. எங்கள் ஊர் மிகச் சாதாரணமான சிறிய ஊர்தான்.மக்கள் மிக அதிகம் என்பதெல்லாம் இல்லை.தோராயமாக இவர் இன்னார் என்று அறிந்து கொள்ளும் ரகம் தான். அப்படியான ஊரில் , காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்திருந்த மூன்று இளைஞர்கள் , நெடுஞ்சாலையில் வந்த காரை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பிடுங்கிக் கொண்டு… Read more: தடம் மாறும் இளைஞர்கள்!
- மருத்துவ மாஃபியா!ஒரு மருத்துவரின் பதிவு. ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்..(-டாக்டர்.பிரதீப் அகர்வால்) நான் ஒரு மருத்துவர் அதனால்தான் அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்.. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 – முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் …. டைபாய்டு வந்ததெனில்,மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும். மொத்த விற்பனை விலை… Read more: மருத்துவ மாஃபியா!
- அமீபா கற்றுத் தந்த பாடம்அமீபா.இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது. எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் குறி என்ற கேள்வி ஒன்று வரும்.அமீபாவின்… Read more: அமீபா கற்றுத் தந்த பாடம்
- கொஞ்சம் கேளு ஐயப்பா!இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு. ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை. இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை டூர் பேக்கேஜ் போல இது மாறிய… Read more: கொஞ்சம் கேளு ஐயப்பா!




