Categories
சினிமா

ஆண் பாவம் பொல்லாதது – விமர்சனம்

அம்பேத்கர் பிறந்த இடம் தான் போர்பந்தர் என்று மனைவி சொன்னாலும் அதுதவறு என்று சொல்லக்கூட தைரியம் இல்லாத ஆண் வர்க்கம். ஒருவேளை அது தவறு என்று சொன்னால் அவன் ஆண் திமிர் பிடித்தவன், ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் கூட பட்டம் கட்டப்படுவான் என்ற பரிதாபமான செய்தியைப் படமாகத் தந்தது தான் இந்த ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம். இரண்டு வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந்தாலும் கூட, நல்ல படம் என்ற பெயரெடுத்து இன்றளவிலும் கூட ஓரளவிற்கு நியாயமான கூட்டத்தோடு […]

Categories
அறிவியல் சினிமா தகவல் நினைவுகள் மறைவு

புரூஸ்லி இறப்பின் மருத்துவ விளக்கம்.

படித்துப் பகிர்வது! புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாகஅதிக குளிர்பானம் / பீர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள் என்று போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது.இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி வாருங்கள் புரூஸ்லீயின் மரணம் வழி பாடம் கற்போம் டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை ஹாங்காங் நகரில் 20.7.1973 அன்றுஹாலிவுட் அதிரடி மன்னன் புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தார் அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும்பயிற்சி செய்யும் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தடம் மாறும் இளைஞர்கள்!

சமீப காலமாக இளைஞர்களின் போக்கு மிக மோசமாக மாறி இருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது. சமீபத்திய சில செய்திகளின் மூலமாக இதை அறிந்திர முடிகிறது. எங்கள் ஊர் மிகச் சாதாரணமான சிறிய ஊர்தான்.மக்கள் மிக அதிகம் என்பதெல்லாம் இல்லை.தோராயமாக இவர் இன்னார் என்று அறிந்து கொள்ளும் ரகம் தான். அப்படியான ஊரில் , காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் ஒன்றில் பயணித்திருந்த மூன்று இளைஞர்கள் , நெடுஞ்சாலையில் வந்த காரை மறித்து கத்தியைக் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மருத்துவ மாஃபியா!

ஒரு மருத்துவரின் பதிவு. ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்..(-டாக்டர்.பிரதீப் அகர்வால்) நான் ஒரு மருத்துவர் அதனால்தான் அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்.. மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 – முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் …. டைபாய்டு வந்ததெனில்,மொத்தம் 14 […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அமீபா கற்றுத் தந்த பாடம்

அமீபா.இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது. எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் கேளு ஐயப்பா!

இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு. ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை. இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை […]

Categories
கருத்து நினைவுகள்

அந்த நாள் ஞாபகம்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே, நண்பனே! அன்று போல் இந்த நாள் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே ?என்று சிவாஜி கணேசனில் துவங்கி இன்று எஸ்.ஜே.சூர்யா வரை, வாழ்வில் பெரும்பாலானோர் வாழ்வின் கடந்த காலத்தை தான் இனிமை என்று சொல்வது எந்த விதத்திலும் மறுக்க முடியாத 100 சதவீத உண்மை. இந்த உலகில் உள்ள மனிதர்களிடம் திடீரென கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானோரின் பதில் […]

Categories
கருத்து தகவல்

அறிவோம் ஆரோக்கியம்-2

உணவு முறை பற்றி நாம் எழுதிய கருத்தை ஒத்த ஒரு மருத்துவரின் கருத்து! நாம் ஏன் குண்டாகிறோம்?? நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். ஏன் நாம் குண்டாகிறோம்??? நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் வேறு என்ன இருக்க முடியும்?? நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா?? நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி […]

Categories
சினிமா

காந்தா- தி்ரை விமர்சனம்

காந்தா- துல்கர் சல்மான், சமுத்திரக்கனி மற்றும் ராணா நடிப்பில் இந்த வாரம் வெளியான பழைய பாணியிலான புதுப்படம். சினிமா பின்புலத்தை, அதிலும் 1960 களின் சினிமா உலகத்தைப் பிண்ணனியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைப்படம். நமக்கெல்லாம் பரீட்சயமில்லாத மிகச்சிறப்பான வித்தியாசமான கதை என்பது இல்லாவிட்டாலும், இது மாதிரியான படங்கள் அடிக்கடி வருவதில்லை.எப்போதாவது தான் வருகிறது என்பதால் , மற்ற படங்களிலிருந்து சிறிது வேறுபட்டு நிற்கிறது. நல்ல சினிமாவை ஆத்மார்த்தமாகத் தர நினைக்கும் கதாசிரியரும், இயக்குநருமான சமுத்திரக்கனிக்கும், அவர் பார்த்து […]

Categories
சினிமா தகவல்

உலகநாயகன் பற்றிய தகவல்.

படித்துப் பகிர்வது! கமல்ஹாசன்குரலில் ஒலித்த 10 பாடல்கள்கமல்ஹாசன் பாடிய குறிப்பிடத்தக்க பத்து பாடல்கள் 7 நவம்பர் 2025தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக பரிமாணங்களைக் கொண்டவர் கமல்ஹாசன்.இந்தத் தருணத்தில் அவர் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல்களில் குறிப்பிடத்தக்க 10 பாடல்களின் பட்டியல் இது. ❥ 1. ஞாயிறு ஒளி மழையில் (1975)கமல்ஹாசன் பாடிய முதல் பாடல். 1975ஆம் ஆண்டில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துக் குவித்தார் கமல்ஹாசன். அதில் ஒன்றுதான் அந்தரங்கம் திரைப்படம். முக்தா […]