இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும். உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம். இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய […]
Category: தற்கால நிகழ்வுகள்
ஆத்துக்குள்ளே …..அயிலயிலா!!

காற்றில் பறக்கும் வாக்குறுதிகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், நீ சொல்றத தண்ணியில தான் எழுதனும் னு பேச்சுவாக்கில் கேலி பேசுவதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது நிஜத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? நிகழ்ந்து தான் விட்டது. உங்களைத் தேடி ஸ்டாலின் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, மருத்துவ காப்பீடு துவங்கி பல வகையான பிரச்சினைகளையும் மனுக்களாகப் பெற்று உடனடியாகத் தீர்வு தருகிறோம் என்று இந்த ஆளும் திமுக அரசு செய்த மாபெரும் வெற்றித் திட்டத்தில், […]

க்யா ச்சையியே? என்னாங்க தலைப்பு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி தோணுதா? இல்ல, இருக்காது, நம்மில் பலருக்கும் இது இந்தி என்றும் இதன் அர்த்தம் என்ன வேண்டும் என்பதென்றும் தெரிந்திருக்கும். காரணம், இந்தியை நாம் பழகாவிட்டாலும் இந்தி நம்மோடு பழகி விட்டது. தேவைக்காக நியாயமான முறையிலும், சில மோசடியான முறையிலும். அப்படி மோசடியாக நுழைந்த இந்திக்காரர்கள் கதை தான் இது. ஆம் ஏற்கனவே, நாம் பல அரசு வேலைகளிலும், ஐஐடி ஐஐஎம் போன்ற மத்திய அரசு கல்வி […]

உலகில் கொரோனா, பூகம்பம் , வெள்ளம், சுனாமி , மேக வெடிப்பு மழை போன்றவை எல்லாம் வந்து மனித இனம் வாடும் போது மனம் வெதும்பத் தான் செய்கிறது. ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மனித இனத்திற்கு இந்த தண்டனை போதாது என்று தான் தோன்றுகிறது. ஆம், மனித இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தாலென்ன என்ற அளவிற்கான கோபத்தை சில விஷயங்கள் ஏற்படுத்துகின்றன. அப்படி இருவேறு துயர செய்திகள் இன்று கேள்விப்பட நேர்ந்தது. முதலாவது, […]
அகமதாபாத் பரிதாபங்கள்-2

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழனின் பண்பு. ஆனால் அதைப் பின்பற்றி மீள் குடியேற்றம் செய்து சிறப்பாக வாழ்வது பெரும்பாலும், வட இந்தியர்கள் தான். அதாவது தமிழ் பேசாத பிறமொழி இந்தியர்கள்.அவர்கள் இங்கே வந்து நமது ஊர் பாதுகாப்பானது , சுகாதாரமானது, நல்ல வேலை வாய்ப்பு வசதி உடையது என்பதை உணர்ந்துகொண்டு இங்கே தங்கி யாவரும் கேளிர், இதுவும் எனது ஊரே , இங்கேயே நான் குடியேறி, ரேஷன் வாங்கி வாக்களிக்கவும் செய்வேன் என்று இங்கேயே […]
தலைவனுக்குப் பிறந்தநாள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. யானையின் தனித்துவம். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பார்கள், ஆனால் சிங்கத்திற்கு இந்தப் பொன்மொழி ஒத்துப்போகாது. இந்தப்பொன்மொழி உலகில் வாழ்ந்து மறைந்த கோடான கோடி மனிதர்களில் ஒருவருக்குத் தான் ஒத்துப் போகும். அப்படி ஒரு உன்னதமான மனிதன், தங்கத்திருமகன், தன்னிகரில்லாத் தமிழ்த்திருமகன், தன்னலமற்ற தலைவன், மக்கள் பற்றாளன், அன்புள்ளம் கொண்ட அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான். அண்ணன் நடிகனாக இருந்த […]

பறவைகள் மட்டுமல்ல மனிதர்களும் பலவிதம் தான். இந்த பூமியானது பல விதமான மனிதர்களை உள்ளடக்கியது என்பதை நேற்று நடந்த இருவேறு சம்பவங்களின் மூலமாக அறிந்திட முடிகிறது. முதலாவது, நமது சென்னை மாநகரில் கண்ணகி நகரில் வசிக்கும் ஒரு தூய்மைத்தொழிலாளி பெண், காலை எழுந்து பணிக்குச் செல்லும் போது, தேங்கிக் கிடந்த மழைநீரில் காலை வைத்து, மழைநீரில் கசிந்திருந்த மின்சாரம் காரணமாக, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்.இது இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல. மழைநீரில் மின்சாரம் கசிவதும் அதனால் […]
ஏமாற்றாதே,ஏமாறாதே!

மோசடி.மனிதனின் தேவை அளவோடு இருந்த போது மோசடி என்பது குறைவாகவே இருந்தது.உணவு, உடை, இருப்பிடம் மட்டும் போதும் என்று வாழ்ந்த காலத்திலும், ஏன் நாகரீகம் என்ற ஒன்று இல்லாத காலத்திலும் மோசடி என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பணமும், பகட்டும் நவநாகரீக வாழ்வும் வளர வளர, மனிதனின் ஆசையும் வளர, மோசடி என்பது வளர்ந்து கொண்டே வருகிறது. பிச்சைக்காரன் முதல் தங்கத்தட்டில் உணவருந்தும் பணக்காரன் வரை ஒரே பூமியில் தானே வாழ்கிறான்.ஆக ஒருவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் […]
ஆகஸ்ட் 22, சென்னை தினம்!

ஆகஸ்ட் 22, சென்னைக்குப் பிறந்தநாள். சொந்த ஊர் தான் சொர்க்கம், சொந்த ஊரைத்தாண்டி வேறென்ன பந்தம் இருந்துவிடப் போகிறது வாழ்வில் என்ற கதையெல்லாம் சென்னைக்கு எடுபடாது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலுள்ள எல்லா ஊர்களிலும் உள்ள பெரும்பாலான ஆட்களுக்கு சென்னையோடு ஒரு பந்தம் இல்லாமல் இருக்காது. எனக்கும் அப்படித்தான். சிறு வயதில் மெட்ராஸ் என்ற ஊர் இருப்பதும், அந்த ஊருக்கு இரவு பேருந்தில் ஏறினால், காலையில் போய் தான் இறங்கலாம் என்றும், அங்கு சென்று நம்ம தெரு ஆட்கள் […]

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இரண்டு கட்சிகள் கடுமையான பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், இன்று ஒருவர், சிங்கம் தனியா வரும், அதைவிடப் பெரிய மிருகங்களைக் குரல்வளையில் கவ்வி வேட்டையாடும், பார்க்கத்தான் போகிறீர்கள் என்று சொல்கிறார். சரிதான், தவெக தலைவர் விஜய் அவர்கள் தான். பட்டாசு கிளப்பும் பேச்சு என்றால் அது மிகையல்ல.தமிழக அரசியலுக்குத் தேவையான பேச்சுக்குத் தயாராகி விட்டார். ஆனால் களப்பணி? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இன்று அவரது பேச்சில் ஒரு பெரிய நம்பிக்கையும் […]