Categories
கருத்து சிறுகதை

டோரா புஜ்ஜி – சொன்ன கதை.

மிகப்பெரிய கதைகளை எப்போதும் தேடித் தேடிப் படிக்கத் தேவையில்லை. மிகச்சிறிய விஷயங்களிலருந்தே வெளிக்கொணரலாம். அதுபோலத்தான் இன்று ஒரு கதை என் மூளைக்குள் சிந்தனையைத் தூண்டியது. கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வீட்டில் பொழுதோடு சுட்டி டிவியும் கார்ட்டூன் சேனல்களும் தான். அப்படி இன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் வந்த டோரா புஜ்ஜி என்ற வகையிலான கார்ட்டூனில் ஒரு சின்ன பகுதியைக் காண நேர்ந்தது. இப்ப நாம எல்லாம் ஒரு கதை படிக்கலாம் ப்ரெண்ட்ஸ். அது மூனு பன்னிங்கள பத்தின […]

Categories
கருத்து குட்டி கதை தற்கால நிகழ்வுகள்

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.

நண்பர்கள் இருவர் சித்திரை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில். தான் தங்கியிருக்கும் அறையை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு நல்ல பசியுடன் கடைக்குச் சென்று பார்த்தால் கூட்டம். அமர்ந்து சாப்பிட இடம் கிடைக்காது என்று தெரிந்து உணவுப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குச் செல்கிறார்கள். நல்ல பசி என்பதால், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் 65 என வகை வகையாக வாங்கிச் சென்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசத்துடன் பகிர்ந்து சாப்பிடுவதைப்பார்த்தால்… அடேயப்பா, இதுவல்லவா நட்பு? சாப்பிட்டு முடியும் […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ் பாடல் வரலாறு

உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறு

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]

Categories
சிறுகதை தமிழ்

வரதட்சணை- சிறுகதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு. பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள். எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது. தாம்பூலம் […]

Categories
சிறுகதை தமிழ்

கனவு – சிறுகதை

சில கனவுகள் நம்மை உறங்க விடுவதில்லை.சில கனவுகள் தூக்கித்தில் வந்தால் கூட நம் நினைவை விட்டு அகலுவதில்லை. அப்படியான ஒரு கனவு தான், நம் கதையின் நாயகனுக்கும். கதையின் நாயகனுக்கு திருமணமாகி விட்டது.இந்த லாக் டவுன் பீரியடில் வேலை இல்லாத காரணத்தால், இரவு 3 மணி வரை விழித்து ஏதாவது படம் பார்த்து விட்டு, காலை 11 மணி வரை தூங்குகிறான். அவனது கனவில்….. கதையின் நாயகன் ராகேஷ், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை ஓரளவுக்கு […]

Categories
சிறுகதை தமிழ்

மகப்பேறு – சிறுகதை

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

ஈடு செய்ய இயலாத இழப்பு

அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

விபத்து- சிறுகதை (பலரை சிதைத்த கதை)

அருண், என்ஜினியரிங் முடித்த பட்டதாரி. வீட்டில் அருண் என்று தான் அழைப்பார்கள். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரன். படிக்கும் போதே கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தான் படித்த படிப்பிற்கும் மென்பொருள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் அந்த வேலைக்கு செல்வதில் அருணுக்கு பெரிய உடன்பாடு இல்லை. ஆனாலும் சரியான பயிற்சி கொடுத்துதான் வேலையில் வைப்பார்கள், சம்பளமும் நல்ல சம்பளம் என்பதால் அவனுடைய அப்பா, இந்த வேலைக்கு சேர சொல்லி தனது […]