Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

பொருளாதார வளர்ச்சி எனும் கானல் நீர்?

பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கணக்கோ அல்லது்கானல் நீரோ? என்ற ஒரு சந்தேகம் ஒவ்வொரு சாமானியனுக்கும் வரலாம்.உண்மைதான்.சமீபத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அடைந்து நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிட்டதட்ட இரண்டு மடங்கு இருப்பதாகவும் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது இந்த அரசு. ஆனால் கவனித்துப் பார்த்தால் புரியும்.ஒரு பாமரனுக்கு, ஒரு வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதனுக்கு, ஏன் பொருளாதாரம் ஓரளவு புரிந்த ஒரு நல்ல […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படியும் சில மனிதர்கள்!

கபடு வாராத நட்பும்,அன்பு அகலாத கணவனும் , மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் என்று பாடியிருக்கிறார் பட்டர். சந்தானம் அதாவது, குழந்தைகள் நல்வழியில் நடப்பவர்களாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பு குறையக் கூடாது எனவும் பாடியிருக்கிறார். இது அப்படியே கிடைத்திருக்கிறது ஸ்பெயின் நாட்டில் வாழும் இந்த தம்பதிக்கு.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாதவர்கள். அதேபோல, அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் நல்ல குழந்தை, பெற்றோரின் மீது அளவற்ற அன்பும், நல்ல பண்பும் உடைய குழந்தை. என்ன ஒரே ஒரு […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்

முருகப் பெருமான் அரசியல் என்பது சமீப காலத்தில் தான் பெரிதாக உருவெடுத்து வருகிறது. நாம் தமிழர் முப்பாட்டன் முருகனுக்குக் காவடி என்று காவடி தூக்கிய பிறகு, ராமரின் பிள்ளைகளான பாஜக தொண்டர்களும், விநாயகரைக் கொண்டாடுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக முருகனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் அசுர வளர்ச்சியும், இந்தத் திடீர் முருக பக்தியைப் பெரிதுபடுத்த வெகுவாக உதவியது. முருகர் சம்பந்தமான குறுஞ்செய்திகள், படங்கள், உருவாக்கப்பட்ட காணொளிகள் என்று முருகா முருகா என்று பட்ட […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள்

2026 ஐ நோக்கி…

சூடுபிடிக்கிறது களம். 2026 தேர்தலை நோக்கி யூகங்களையும் கூட்டணியையும் வகுப்பது மட்டுமல்லாது ,தமிழகம் முழுக்கப் பிரச்சாரப் பயணங்களும் ஆங்காங்கே துவங்கி விட்டது. ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு புறமும், மீட்போம் தமிழகத்தை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தீவிர பிரச்சார முன்னெடுப்பைத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சுற்றி எடப்பாடியார் மின்னல் வேகப் பிரச்சாரம் செய்த போது யதார்த்தமாக நாம் எதிரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது. […]

Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒழுக்கமில்லாத பக்தி?

முருகனுக்கு அரோகரா! அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.திடீர் முருக பக்தர்களா?அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர்  சென்றிருந்தோம். திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

மாட்டிக்கிட்டீங்க பங்கு!

திருட்டுகள் பலவிதம், திருடர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். இன்றைய சூழலில் திருட்டுத்தனம் செய்து அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைப்பது பெரும்பாலனோரின் முழுநேரத் தொழிலாகவே மாறிப்போனது. சில மாதங்களுக்கு முன் என் கண்முன்னே நிகழ்ந்த ஒரு பகல் நேர ஏமாற்று வேலை பற்றி பதிவிட்டிருந்தேன், பலரும் படித்திருக்கலாம்.ஒரு பரபரப்பான காய்கறி கடைக்கு வந்த ஒரு ஆள், ஏதோ ஒரு காய் வாங்கிவிட்டு 35 ரூ வியாபாரத்திற்கு 2000 ரூ தாளை நீட்டினான்.அந்தக் கடைக்கார அம்மாவோ கடிந்து கொண்டே, சில்லறை […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

மீண்டுமொரு ஆணவப்படுகொலை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இதைச் சொன்ன வள்ளுவனின் சாதி என்னவென்று தெரியாத காரணத்தால் இன்னும் அவருக்குக் கொஞ்சம் மரியாதை மிஞ்சியுள்ளது. இல்லாவிட்டால், அவர் இந்தக் காரணத்தால் தான் இதைக் கூறினார், அந்தக் காரணத்தால் அதைக் கூறினார் என்று சொல்லி திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி விடுவார்கள். இந்த ஆண்டு 2026. வள்ளுவராண்டு 2056. அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று 2056 ஆண்டுகளாகப் படித்து விட்டு, ஒரு இளைஞன், மாற்று சமூகத்தில் உள்ள பெண்ணிடம் பழகியதற்காக, அந்தப் […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

இப்படி ஒரு சான்றிதழ் பெற முடியுமா?

வேலைனு வந்துட்டா நாங்கல்லாம் கம்ப்யூட்டர் மாதிரி. மேசைல காகிதம் இருந்தா கையெழுத்துப் போட்டுத் தள்ளிருவோம். அது எங்களோட இறப்புச் சான்றிதழாவே இருந்தாலும் சரி என்று நிரூபித்திருக்கிறார் இந்த வட்டாட்சியர். சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் ஒரு விவசாயி தனது வருமானச் சான்றிதழை விண்ணப்பித்திருக்கிறார். அவரது வருமானத்தை மாதம் 2500 ரூ என்றும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லி விண்ணப்பித்திருக்கிறார். தகவல்களை நேர்மையாக சரிபார்த்த அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அவருக்கு சான்றிதழ் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

பிரியாணி அண்டா கவிழ்த்தப்பட்டது!

மனிதர்களில் பல ரகம். அன்பின் வடிவான அன்னை தெரசாவும் மனிதன் என்ற பிரிவு தான். கள்ளக்காதல் இச்சைக்காக, உடல் சுகத்துக்காக, கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, பெற்ற இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்வளும் மனிதப் பிறவி தான். “அபிராமி, அபிராமி… மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது.” சமைக்கும் போது மனக்கும் பிரியாணி்போல, சாப்பிடும் போது ருசிக்கும் மசாலா போல, உவமிக்க இயலாத உன்னத காதல். டிக்டாக்கில் உருவாகி டக் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என் உடலோடு பேசிய தருணம்

நான் என் உடலோடு பேசிக்கொண்ட தருணம்.பொதுவாக வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு, சுமார் 8.5 கிமீ தூரம் எப்போதும் இருசக்கர வாகன பயணம் தான். ஏறி அமர்ந்து டுபு டுபு என்று முறுக்கினால், 30-45 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம். இடையில் ஒன்றிரண்டு மேம்பாலம், சில சிக்னல்கள், என்று பெரிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதை தான். நேற்றைய முன் தினம் அந்த 8.5 கிமீ சைக்கிளில் பயணிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு அமைந்தது. அப்போது அந்தப்பயணத்தில் […]