Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை

சமீப காலங்களில் மிகப்பெரிய கொள்ளை, பகல் கொள்ளை எது என்றால், அது தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் தான். 3-3.5 வயது நிரம்பிய பிள்ளைகள் LKG படிப்பதற்கு சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கட்டணமாகப் பெறுவதும், அதை மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பெற்றோர்கள் கட்டுவதும் வழக்கமாகிப் போனது. சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பள்ளியின் LKG வகுப்பிற்கான கட்டண ரசீதைக் கண்டு மிரண்டு போனேன். அதைப்பற்றி சிறிது விளக்கமாக எழுதி எனது ஆதங்கத்தைத் தீர்த்துக் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அன்பான அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மாதா பிதா குரு தெய்வம். ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சிறப்பாக அமைய தெய்வத்தை விட இன்றியமையாதவர்கள் ஆசரியர்கள். குரு என்பவருக்கு அத்தகைய மரியாதையும் இருந்தது என்பது உண்மை தான். குருவுக்காக விரலை வெட்டிக் கொடுத்த கதை, குரு சாபமிட்டு வித்தை மறந்து உயிரிழந்த கதை எல்லாம் படித்தவர்கள் தான் நாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குரு என்பவருக்கு அத்தகைய மரியாதை இருக்கிறதா என்றால் சிறிய கேள்விக்குறி தான். தனியார் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

கரைந்து போன கனவுகள்

எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வெட்டுவது போல விபத்துகள் நிகழ்ந்து மிகப்பெரிய பாதிப்பையும் துயரத்தையும் உருவாக்கி விட்டுச் செல்வது தவிர்க்க இயலாத ஒன்றுதான். ஆனால் சில மனிதர்களின் அலட்சியத்தால் விபத்துகள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சார்ந்த அக்காளும் தம்பியும் துடிதுடித்து இறந்து போவது என்பது மனதைத் துளைத்து விடும் தோட்டாக்கள் போன்றது. கடலூரில் பள்ளி வேனின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது என்பதில் பலரும் பலவிதமான கருத்துகளையும், செய்திகளையும் சொன்னாலும் கூட, நம் யாராலும் அந்த இழப்பை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வழக்கொழிந்த ஒழுக்கம்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது. 90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடிதான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள். வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும். […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காவல்துறை யார் நண்பன்?

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான். காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி. விடை தெரியாத கேள்வி. காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல. காவல்துறையில் பணிபுரியும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பெண் பிள்ளைகளைப் பெற்றோரே!

அலட்சியத்தாலும், ஆறுதல் சொல்லி சொல்லி அரைகுறையாக கவனிக்காமல் விட்டதாலும் துடிதுடித்துப் போயிருக்கிறது இளம்பெண்ணின் உயிர். நாம் அனைவரும் கேள்விப்படும் அவிநாசி இளம்பெண் தற்கொலை பற்றியது தான் இந்தப் பதிவு. பொதுவாகவே ஒரு பெண் திருமணமாகி மாமியார் வீட்டுக்குச் செல்லும் போது ஆரம்ப காலங்களில் அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் ஒத்து வராமல், சில பிரச்சினைகள் வருவது இயல்பு தான். அதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்தால், அவர்கள் சொல்லும் வார்த்தை.“அது அப்படித் தானம்மா.கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

ஏங்ங்ங்ங்க கொஞ்சம் திருந்துங்க!!

நாம் எந்த அளவிற்கு சுய சிந்தனையோடு வாழ்கிறோம்? எந்த அளவிற்கு சமூக ஊடக இன்ப்ளூயன்சர்களால், ( தனக்கான பரத்யேகமான செல்வாக்கை உருவாக்கியவர்கள்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்பதை மீண்டும் இந்த கூமாப்பட்டி விஷயம் நமக்கு நிரூபித்து விட்டது. விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி சட்டத்திற்குப் புறம்பான வேகத்தில் ஓட்டுபவனைத் தலைவன் என்று கொண்டாடியது நமது இளைய சமுதாயம். அதில் எத்தனை பேரின் தந்தை, ஓட்டுநர்கள் அன்றாடம் தமது உயிரைப்பணயம் வைத்து வாழ்வாதாரத்தைத் தேடுபவர்கள் என்பது தெரியவில்லை. எதற்காக ஒருவர் பிரபலமாகிறார் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இலவச போலி உபதேசங்கள்

இன்று சமூக ஊடக இடுகை ஒன்றைப் பார்த்தேன். சமூக ஊடக இட்டுகை என்பது சோசியல் மீடியா போஸ்ட், தமிழ் மாநாட்டில் சமீபத்தில் 25 க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை உருவாக்கி உள்ளனர். அதில் இந்த வார்த்தையும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வார்த்தகயின் தமிழாக்கத்தைக் கண்டு நான் வியப்படைந்தேன். லிவிங் டுகதர் என்ற வார்த்தைக்கு மன வாழ்க்கை என்று தமிழாக்கம் செய்திருக்கின்றனர். யார் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதைப் பார்க்க எனக்கு ஆர்வமாகத்தான் உள்ளது. சரி அதை […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கள் மட்டும் தான் சமுதாய சீரழிவோ?

சில விஷயங்களை நாம் மிக யதார்த்தமாகப் பழகிக் கொண்டோம்.கள்ளு இறக்கத் தடை இருக்கும் இதே மாநிலத்தில் கொக்கைன் மிக எளிதாக வெகு காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதுவும் மிகப் பிரபலமான மனிதர்களிடையே அது சர்வ சாதாரணமாகக் கைமாறியிருக்கிறது. நாம் இதுநாள் வரை கள்ளு இறக்க ஏன் தடை? அதுவும் ஒரு தொழில் தானே?பனை மரங்களின் எண்ணிக்கை கூடும், அதைச் சார்ந்த தொழில்கள் பெருகும் என்று கேள்வி கேட்டதுமில்லை. கொக்கைன் போதையில் சினிமா பிரபலங்கள் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையவுமில்லை […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள்

2026 ல் தளபதியா?தளபதியா? மதவாதமா? தமிழ் தேசியமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முருகன் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமல் திரும்பிச் சென்றிருக்கின்றனர் என்று பாஜக வின் சார்பில் செய்திகள் வருகிறது. இவை முழு உண்மையாக இல்லாவிட்டாலும் மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றாலும் கூட, பாஜக சார்பில் இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிகரமான மாநாடு தமிழ்நாட்டில் நிகழ்ந்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய […]