Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

இலவச போலி உபதேசங்கள்

இன்று சமூக ஊடக இடுகை ஒன்றைப் பார்த்தேன். சமூக ஊடக இட்டுகை என்பது சோசியல் மீடியா போஸ்ட், தமிழ் மாநாட்டில் சமீபத்தில் 25 க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை உருவாக்கி உள்ளனர். அதில் இந்த வார்த்தையும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வார்த்தகயின் தமிழாக்கத்தைக் கண்டு நான் வியப்படைந்தேன். லிவிங் டுகதர் என்ற வார்த்தைக்கு மன வாழ்க்கை என்று தமிழாக்கம் செய்திருக்கின்றனர். யார் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதைப் பார்க்க எனக்கு ஆர்வமாகத்தான் உள்ளது. சரி அதை […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கள் மட்டும் தான் சமுதாய சீரழிவோ?

சில விஷயங்களை நாம் மிக யதார்த்தமாகப் பழகிக் கொண்டோம்.கள்ளு இறக்கத் தடை இருக்கும் இதே மாநிலத்தில் கொக்கைன் மிக எளிதாக வெகு காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதுவும் மிகப் பிரபலமான மனிதர்களிடையே அது சர்வ சாதாரணமாகக் கைமாறியிருக்கிறது. நாம் இதுநாள் வரை கள்ளு இறக்க ஏன் தடை? அதுவும் ஒரு தொழில் தானே?பனை மரங்களின் எண்ணிக்கை கூடும், அதைச் சார்ந்த தொழில்கள் பெருகும் என்று கேள்வி கேட்டதுமில்லை. கொக்கைன் போதையில் சினிமா பிரபலங்கள் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையவுமில்லை […]

Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள்

2026 ல் தளபதியா?தளபதியா? மதவாதமா? தமிழ் தேசியமா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த முருகன் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமல் திரும்பிச் சென்றிருக்கின்றனர் என்று பாஜக வின் சார்பில் செய்திகள் வருகிறது. இவை முழு உண்மையாக இல்லாவிட்டாலும் மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றாலும் கூட, பாஜக சார்பில் இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிகரமான மாநாடு தமிழ்நாட்டில் நிகழ்ந்திருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய […]

Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

2026ல் தளபதியா? தளபதியா? – முதல் பாகம்.

கதை கேட்டு, அதில் சிறப்பானதைத் தெரிவு செய்து, ராப்பகலாக உழைத்து, சிறந்த படைப்பாளிகள் மற்றும் உழைப்பாளிகளைக் கொண்டு சீர்படுத்தி, விளம்பரப்படுத்தி வெளிவரும் திரைப்படங்களே சமயங்களில் நாம் எதிர்பார்ப்பது போல நல்ல விதமாக அமையாமல், தோல்வியில் சென்று முடியும் போது, அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்? எம்ஜிஆர் அரசியலில், வென்று மாபெரும் சாதனைகளைப் படைத்தது உண்மை தான் என்றாலும், அவரது சமாகால நடிகரான சிவாஜி கணேசன் அரசியலில் படுதோல்வி அடைந்தார். அதேபோல, சரத்குமார் அவர்களும் தான் நினைத்து போல , […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

உலகின் கேடுகெட்ட உயிரினம்- மனிதன்-1.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. ஔவையின் இந்த வாக்கிற்கு ஏற்ப, இந்த உலகில் இன்றும் மழை பெய்யக் காரணமான சில நல்லவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இணையத்தில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்த விஷயம் தான்.சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு முதியவரும் அவரது மனைவியும் ஒரு நகைக்கடைக்குச் சென்றதும், அந்த முதியவர் தனது அறியாமை காரணமாக வெறும் 1120 ரூபாயோடு மனைவிக்குத் தங்க நகை வாங்க வந்ததையும் அறிந்த கடைக்காரர், அந்த […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கண்ணாடியைப் பார்த்து துப்பிக் கொள்வோமா?

பழைய பதிவு தான்.ஆனால் இன்றைக்கும் இதன் அவசியம் தீரவில்லை. மெர்சல் திரைப்படம்! ஒரு காட்சியில் விஜய் அவர்கள் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை கட்டுதல் அவசியம் என்ற முடிவை எடுப்பார்! அதை நமக்கு கொரோனாவின் உச்சகாலம் உணர்த்தியது. சென்னையின் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டது.அதாவது ஆரம்ப கட்ட பரவலின் போது.அதன்பிறகு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

கொஞ்சம் நியாயமாகப் பேசலாமே?

வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஒரு சொல்லாடல் உண்டு. அது பிறரை பழித்து, ஏசி, தேவையில்லாமல் பொய் பேசக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட சொல்லாடல். இன்று இணையதளம் இருக்கிறது, பேசுவதற்கு, எழுதுவகற்கு மிகவும் சௌகரியமாகவும், எளிமையாகவும் இருக்கிறது என்பதற்காக பலரும் தாம் நினைப்பதை வகை தொகை இல்லாமல் பேசியோ எழுதிய விடுகிறார்கள். இதில் பல பேர் தங்களுடைய சுய விவரத்தில் இல்லாமல் போலி அடையாளங்களுடன் இணையத்தில் உலா வருகிறார்கள். இதில் சமீபத்தில் பேசு […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

ஆழ்ந்த இரங்கல்!

விபத்து. தவர்க்க முடிந்தால் தவிப்பு இல்லை.ஆனால் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து நம்மைத் துயரில் ஆழ்த்துவது தான் விபத்து. அதிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பெரும் விபத்து என்றால் நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்து விடவோ அல்லது ஜீரணிக்கவோ இயலாது. எத்தனை கனவுகளையோ, எத்தனை பாசங்களையோ, எத்தனை தொழில் ஏற்பாடுகளையோ, உயிர்களின் கூறாக, வெவ்வேறு நாட்டைச் சார்ந்த மக்களை தூக்கிப் பறக்கத் துவங்கிய , பறக்கும் விசை சரியாகக் கிடைக்காத காரணத்தால் பறக்கத் துவங்கிய சில […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

புலியைப் பார்த்து பூனை கோடிடலாமா?

பலதரப்பட்ன உணவு மற்றும் அதன் சுவை என்பது இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.சமூக வலைத்தளங்களான யூடியூப் ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என எங்கு சென்றாலும், இந்த உணவுப் பிரியர்களின் அட்டகாசம் தாங்க இயலவில்லை. மிக யதார்த்தமாக ஆரம்பித்த இந்த உணவுப் பிரபலத்துவமும் விளம்பரமும் இப்போது கடும் போட்டியாகிப் போனது. காலையில் அவசரமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக பொள்ளாச்சி அருகிலுள்ள தோப்புக்குச் சென்று பிறகு குளிப்பதற்காக சிறுவாணி பக்கம் வரும் வழியில் ஈரோடு நகரிலே உள்ள ஐயப்பன் உணவகத்தைப் பற்றி […]

Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

தன்னைத்தானே அழித்த ஒழுங்கீனம்

சுய ஒழுக்கம், மனசாட்சி என்பதையெல்லாம் மறந்து விட்டால்,மனிதனுக்கும், கொடிய மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. படித்தவன், படிக்காதவன், அவனது பின்புலம், பூர்வீகம் என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே அல்ல. முள்செடியில் மலரும் உண்டு, பூக்களில் விஷமும் உண்டு என்பதைப் போல, ஒரு மருத்தவர் கேவலம் 25 சவரன் நகைக்காக ஒரு இளம்பெண்ணை துடிக்கத் துடிக்க மூச்சடைத்துக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு மிகுந்த மனவேதனையத் தருகிறது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு […]